[ad_1]





EXAM என்ற இங்கிலாந்துப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? 2009 -ல் ரிலீஸான படம் உலக சினிமாவாக கொண்டாடப்பட காரணம் இருக்கிறது. மொத்த படமும் 8 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் மிகச்சிறிய தேர்வு அறைக்குள் எடுக்கப்பட்டிருக்கும்.

 


உலகப் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று ரகசியமாக வேலைக்கு ஆள் எடுக்கிறது. ஒரே ஒரு பணியிடத்துக்கு 8 பேர் நேர்முகத் தேர்வுக்கு வருகிறார்கள். அந்த 8 பேருக்கும் தேர்வுத்தாள் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதில் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. வெற்றுத்தாளைவைத்து என்ன பதில் எழுதப்போகிறார்கள்? என்னென்ன அதிரடிகள் தேர்வறைக்குள் அரங்கேறும் என்பதே அந்த முதுகெலும்பை ஜில்லிடவைக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தின் கதை ‘அச்சச்சோ... நான் படம் பார்க்கலையே..!’ என்றுதானே நினைக்கிறீர்கள். படம் பார்க்காவிட்டாலும் குற்றமில்லை. இதோ இந்தக் கதையைப் படியுங்கள் போதும். 

வகுப்புக்குள் நுழையும் பேராசிரியர் தன் மாணவர்களுக்கு சர்ப்ரைஸாக தேர்வு ஒன்றை வைக்கப்போவதாக சொல்கிறார். மாணவர்கள் மத்தியில் சின்னதாய் சலசலப்பு எழுந்தவுடன், 'பயப்படாதீங்க பாய்ஸ்! ஒற்றைக் கேள்விதான். மற்ற பேராசிரியர்களைப்போல பாடப்புத்தகத்திலிருந்துலாம் தேர்வு வைக்க மாட்டேன். நான் தனியன். இனியன்!' என்று சொன்னதும் எல்லோருடைய முகத்திலும் ஒரு இனம்புரியா குறுகுறுப்பு எட்டிப்பார்க்கிறது. எதையோ சாதித்துவிட்ட உணர்வோடு எல்லோருக்கும் தேர்வுத்தாளைக் கொடுத்துவிட்டு தன் கைக்கடிகாரத்தைப்பார்க்கிறார் பேராசிரியர்.

“ம்ம்...இப்போ பிரிச்சு கேள்வியைப் பார்த்து பதில் அளியுங்கள் பார்க்கலாம்'' என்கிறார். எல்லோரும் ஆர்வமாய் கேள்வித்தாளைப் பிரித்துப் பார்த்து ஷாக் ஆகிறார்கள். Exam படத்தில் வருவதைப்போல வெற்றுத்தாளாய் இருக்கிறது. ஆனால், கேள்வித்தாளை உற்றுப்பார்த்தால் ஒற்றைப் புள்ளி மட்டும் தாளின் மையத்தில் இருக்கிறது. எல்லோரும் அந்தப்புள்ளியைப் பார்த்துக் குழம்பிப் போய் பேராசிரியரை நோக்குகிறார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் இருக்கும் கலவையான ரியாக்ஷனைப் பார்த்து சிரிக்கும் பேராசிரியர், “நீங்கள் என்ன பார்த்தீர்களோ அதை எழுதினால் போதும். இதுதான் இன்றைய தேர்வு!'' என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்கிறார். அடுத்த அரைமணிநேரத்தில் தேர்வு முடிவடைகிறது. எல்லோரின் பதில்களையும் வாங்கியவர், “இந்தத் தேர்வை வைத்து உங்களை நான் மதிப்பிடப் போவதில்லை. ஆனால், உங்கள் எல்லோரின் பார்வையையும் மாற்ற முடியும் என உறுதியாக நம்புகிறேன்... அதாவது வாழ்க்கையை out of the box சிந்திக்கும்  மாற்றுப்பார்வையை..!'' என்று சொல்கிறார். மாணவர்கள் அமைதியாக பேராசிரியரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரின் பதில்களையும் பொறுமையாக படித்துவிட்டு கடைசியில் மாணவர்கள் முன் நின்று பேச ஆரம்பிக்கிறார். 

“வகுப்பிலிருக்கும் அனைவரும் கறுப்புப் புள்ளிக்கு விதவிதமான விளக்கங்கள் கொடுத்தீர்கள். வட்டமென்றீர்கள். சதுரமென்றீர்கள். கறுப்பின் தன்மையை வர்ணித்தீர்கள். புள்ளிக்கு ஆயிரம் விளக்கங்கள் வைத்திருக்கிறீர்கள். மொத்தத்தில் அந்தப் புள்ளியைப்போல ஒற்றை ஆளாக தனித்துத் தெரிய அத்தனை பிரயத்தனப்பட்டீர்கள். ஒருவர்கூட அந்தப்புள்ளியை விட்டு வெளியே வந்து அத்தனை பரந்த பரப்பில் இருக்கும் வெண்மையைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இப்படித்தான் வாழ்க்கையைக் கொண்டாடாமல் அதன் துயரங்களை மட்டுமே நம் மனம் பார்க்கிறது. இந்த வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்ட வெள்ளைப் பக்கம் போல. அதைக் கொண்டாட மறந்து நமக்குள் ஏற்படும் சிறு கறும்புள்ளி போன்ற துயரங்களையே மனதிற்குள் உழலவிட்டு இந்த வாழ்வின் அழகை, இனிமையைக் கொண்டாட மறந்துவிடுகிறோம்.!” என்று சொல்லிவிட்டு மாணவர்களை பெருமிதப் பார்வை பார்த்தார். வகுப்பறையில் இருக்கும் ஒட்டுமொத்த மாணவர்களும் கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள் ஒரேயொரு மாணவனைத் தவிர..!


நீதி: யாருக்கும் நீதிலாம் சொல்லாதீங்க.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");