[ad_1]



ஹார்ட்வேர் விஷயத்தில் எப்படி ரெட்மி கவனமாக இருக்கிறதோ அதேபோல அதன் மென்பொருள் விஷயத்திலும் இருக்கிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தோடு ஒப்பிடும் போது ஜியோமியின் கஸ்டமைஸ்டு ஓஎஸ் ஆன MIUI பல வசதிகளை அளிக்கிறது. ஒப்பன் சோர்ஸ் இயங்குதளமான ஆண்ட்ராய்டை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐஒஸ் போன்றே வடிவமைத்திருந்தது. ஒவ்வொரு வருடமும் MIUI மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு பல புதிய வசதிகள் சேர்க்கப்படும். கடந்த வருடம் MIUI 8 வெளியானபோது அதில் இருந்த டூயல் ஆப்ஸ், செகண்ட் ஸ்பேஸ் போன்ற வசதிகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதே போல இந்த வருடமும் பல புதிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது MIUI 9.இந்த மாதம் 2-ம் தேதி இந்தியாவில் MIUI 9 ஐ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக ஜியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி என்னென்ன வசதிகள் MIUI 9 ல் இருக்கின்றன?

வேகம்

MIUI 9 இல் வேகம்தான் சிறப்பம்சம். முந்தைய வெர்ஷன்களை விட வேகமாக செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

Split screen:




இந்த வசதி ஏற்கெனவே சில ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது. ஒரு திரையை இரண்டாக பிரித்து மேலே ஒரு ஆப், கீழே ஒரு ஆப் என ஒரே நேரத்தில் இரண்டு ஆப்களை கையாளும் வசதியை அளிக்கிறது Split screen. தற்பொழுது ஒரு சில ஆப்களை இந்த வசதி சப்போர்ட் செய்வதில்லை. போனின் செட்டிங்க்ஸ்க்கு சென்று டெவெலப்பர் ஆப்ஷன் பகுதியில் இருக்கும் “Force activities to be resizable"; கிளிக் செய்து மொபைலை ரீஸ்டார்ட் செய்தால் அணைத்து ஆப்களையும் Split screen வசதியில் பயன்படுத்தலாம்.

Image editing




ஏற்கெனவே இமேஜ் எடிட் செய்யும் வசதி MIUI-ல் இருக்கிறது. அதில் தற்பொழுது படத்தில் இருக்கும் தேவை இல்லாதவற்றை அழிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலமாக படத்தின் குறிப்பிட பகுதியை தேர்வு செய்து அழிக்க முடியும். உதாரணத்துக்கு மேலே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.

Screen Recorder




இதற்கு முன்பு மொபைலில் ஸ்க்ரீன் ரெக்கார்டர் வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால் ஸ்மார்ட்போனை ரூட் செய்திருக்க வேண்டும். அதற்கென தனியாக ஆப்கள் இருக்கும். ரூட் செய்த மொபைல்களில் மட்டுமே இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்ய முடியும் . அதை தற்பொழுது எளிதாக்கியிருக்கிறது MIUI 9. Screen Recorder வசதி மூலமாக திரையில் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்ய முடியும்.

Silent mode




ஆப்பிள், ஒன் பிளஸ் போன்ற மொபைல்களில் சைலன்ட் மோட் ஐ ஆக்டிவேட் செய்வதற்கு தனியாக பட்டன் ஓன்று இருக்கும். ஜியொமி மொபைல்களில் அது இல்லை, எனவே சைலன்ட் மோட் ஐ எளிதாக அணுகும் வகயில் ஒலியை குறைக்கும் பொழுது தோன்றும் திரையிலேயே அதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. அதே இடத்திலேயே அதன் நேர அளவையும் நிர்ணயித்துக்கொள்ள முடியும்.

- திரையின் இடது புறம் ஸ்வைப் செய்தால் தோன்றும் App vault என்ற வசதி மூலம் மொபைலில் அதிகம் பயன்படுத்தும் ஆப்களை விரைவாக அணுக முடியும்.

- ஏற்கெனேவே இருந்த Mi Drop ஆப் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

- புகைப்படங்களில் பயன்படுத்துவதற்காக புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

- ஆப்களை ஒவ்வொரு முறை பயன்படுத்திவிட்டு வெளியே வரும் பொழுது ஐகான்கள் அசையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

- ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்களை தேர்வு செய்து ஒரே நேரத்தில் இடம் மாற்றவோ அல்லது அன்இன்ஸ்டால் செய்யவோ முடியும்.

- காலன்டரில் பஞ்சாங்கம், ஜோதிடம், அன்றைய நாளில் நடந்த தகவல்கள் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

MIUI 9 அப்டேட் ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டு ஜியோமி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும். எனவே ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைத்திருக்கும், மற்ற மொபைல்களுக்கு சில கால இடைவெளியில் கிடைக்கும். அதே போல மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு சில வசதிகள் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. அடுத்த அப்டேட்களில் அவை தரப்படலாம்.