[ad_1]
கந்துவட்டிக் கொடுமையால் கடந்த மாதம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்து இறந்தனர். இச்சம்பவம் தமிழகத்தை உலுக்கிவிட்டது. கந்துவட்டிக் கொடுமைக்கு காரணம், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தைக் காவல்துறை சரியாக நடைமுறைபடுத்தாததுதான் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் அதிக வட்டி வசூலித்த மூன்று பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேலூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனன் என்பவரிடம் ஒரு லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஒருவருடத்துக்குப் பின் வட்டி 36 ஆயிரம் சேர்த்து பணத்தைத் திருப்பி கொடுத்துள்ளார். இது போதாது இன்னும் ஒரு லட்சம் தர வேண்டும் என்று மயில்வாகனன் சொல்லியிருக்கிறார்.
அதெல்லாம் தரமுடியாது என்று சீனிவாசன் சொல்ல, `உனக்கு ஜாமீன்போட்ட அம்பிகாபதி வீட்டுக்கு வா பேசிக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். அங்கு சென்றபோது மயில்வாகனன், அம்பிகாபதி மற்றும் நீலமேகம் ஆகியோர் சேர்ந்து மூன்று 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்துபோடும்படி மிரட்டியுள்ளனர். இவர் மறுக்கவே, அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
பின்னர், சீனிவாசனிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அனுப்பியுள்ளனர். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து மயில்வாகனன், அம்பிகாபதி, நீலமேகம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பணம் வாங்கியவரை சித்திரவதை செய்த கந்துவட்டிக் கும்பல்! - கடிவாளம் போட்டது போலீஸ் | Kanthuvatti
TAGS :
COMMENTS