[ad_1]
ஜனாதிபதி விருது வாங்கிய உலகப்புகழ் பெற்ற கடம் தயாரிப்பாளர் மீனாட்சி இன்று மானாமதுரையில் காலமானார்.
அவரைப்பற்றி தீக்கதிர் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் ராமச்சந்திரன் பேசும்போது, "சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்டத்துக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. நம்மை மகிழ்விக்கும் இனிமையான இசையைக்கொடுக்கக் கூடிய கருவிகளில் ஒன்றான கடம் தயாரிப்பது இங்கேதான். கடம் கடல்கடந்தும் பயணித்தது. ஆனால், இன்றைக்கு அந்தக் கடத்திற்குப் பெருமை சேர்த்த மீனாட்சி காலமாகிவிட்டார். இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்கள் எல்லாம் இங்கே வந்து கடம் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள். ஏழு ஸ்வரங்களை தன் கைக்குள்
வைத்து ஒவ்வொன்றுக்கும் உயிர் கொடுக்கும் அன்னை மீனாட்சி இன்று நம்மிடம் இல்லை. நான்கு தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் தன் குடும்பம் இருந்தாலும் பதினேழு வயதில் கடம் செய்யும் வாய்ப்பை கலைமகள் இவளுக்கு வழங்கினாள்.
இன்றைக்கு இசைக்கச்சேரிகளில் எத்தனை நவீனக்கருவிகள் இருந்தாலும் கடம் இல்லாம் எந்த இசையும் நிறைவுறாது. இந்தியாவில் எங்கு கடம் வாங்கினாலும் கர்நாடக இசைக் சங்கீதங்களுக்கு ஏற்றபடி இசைக்க முடியாது. அந்த அளவுக்கு திருப்தியளிக்காது என்பதற்காகவே இசைக்கலைஞர்களின் கூட்டம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்குப் படையெடுக்கும். கலைமகள் இவர் கையில் குடியிருந்ததாலோ என்னவோ கடம் செய்யும் பெரும் பாக்கியத்தை மீனாட்சியைத் தவிர வேறு யாருக்கும் வழங்கவில்லை.
கடந்த 2013ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இசைக்கலைஞர்களை கவுரப்படுத்தும் போது கடம் மீனாட்சியையும் கௌரவப்படுத்தினார். ஆனால், இன்றைக்கு அந்தக் கடத்துக்குப் பெருமை சேர்த்த
மீனாட்சி காலமாகிவிட்டார். மீனாட்சி எங்கள் ஊருக்குக் கிடைத்த பெருமை" என்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கடம் மீனாட்சி காலமானார்! | Kadam meenach died in Manamadurai
TAGS :
COMMENTS