[ad_1]
JEE நுழைவுத்தேர்வில் குஜராத்திக்கு சலுகை அளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவின் மதிப்பிற்குரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய அரசின் நிதியுதவியோடு நடத்தப்படும் ஏனைய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE(Joint Entrance Examination) நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பில் எழுந்துள்ள மொழிப் பிரச்னை தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மத்தியில் மோடி அரசு வந்ததிலிருந்தே மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமே இருந்தன. ஒரே இந்தியா கோஷத்தின் கீழ், இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி புகுத்தப்பட்டதும் அதற்கு கர்நாடகா, கேரள மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்புக்களைத் தெரிவித்தன. இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன. அதேபோல மெட்ரோ ரயில் நிலைய பெயர்ப் பலகையில் இந்தி திணிக்கப்பட்டபோதும் கர்நாடகாவில் எதிர்ப்புக் கிளம்பியது. கர்நாடகாவில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியே அறிமுகம் செய்யப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தனது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்.
தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டங்களிலும் மொழிப் பிரச்னை முக்கியப் பங்கு வகித்தது. அதேபோல சமீபத்தில் தமிழக பாலிடெக்னிக்குகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வான ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் 107 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியானதும் தமிழக அரசுக்குக் கண்டனம் எழுப்பப்பட்டது. இப்படியாக இந்தியா முழுவதும் மத்திய அரசும், மத்திய அரசின் செல்வாக்குள்ள மாநில அரசுகளும், மாநில உரிமைகளைப் பறிப்பதிலும், விட்டுக்கொடுப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இச்சூழலில், ஐஐடி, என்ஐடி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE(Joint Entrance Examination) நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இத்தேர்வுகள் JEE மெயின், JEE அட்வான்ஸ்டு என இரண்டு பகுதிகளாக நடத்தப்படும். JEE மெயின் தேர்வில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இத்தேர்வு முறையானது, தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.
பின்னர், 2013ஆம் ஆண்டில் இத்தேர்வு முறையை ஏற்றுக்கொண்ட குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆங்கிலம் இந்தியுடன் கூடுதலாக குஜராத்தி, மராத்தி, உருது மொழிகளிலும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதாவது, டையூ-டாமன், தத்ரா, நகர்ஹவேலி யூனியன் பிரதேசம் மற்றும் குஜராத் மாணவர்கள், இந்தி, ஆங்கிலம், உருது அல்லது குஜராத்தி மொழியில் ஒன்றை தேர்வு செய்யலாம். இதுபோல மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி மொழிகளில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்றெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதுகுறித்து JEE சார்பாகக் கூறும்போது, இது நல்ல நடைமுறை மாற்றம் என்றும், மேலும் பல மாநிலங்கள் இணையும்போது மொழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நேர்மறையாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், அறிவித்ததற்கு மாறாக, கடந்த 2017ஆம் ஆண்டில், குஜராத்தி தவிர மற்ற மாநில மொழிகள் அனைத்தும் JEE நுழைவுத்தேர்விலிருந்து தடாலடியாக நீக்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகள் மட்டும் JEE நுழைவுத்தேர்வில் இடம்பெற்றுள்ள செய்தி, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும், குஜராத்தி மொழிக்கும் மட்டும் அளிக்கப்பட்டுள்ள தனிச்சலுகையின் மூலம், மற்ற மாநில மொழி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
JEE நுழைவுத்தேர்வில் குஜராத்திக்கு சலுகை! வெடிக்கும் மொழி சர்ச்சை
TAGS :
COMMENTS