[ad_1]
Chennai: வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா மற்றும் ஜெயா டி.வி மேலாளர் நடராஜன் ஆகியோர், இன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.
தமிழகம், பெங்களூரு, புதுச்சேரி என சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் ஐந்து நாள்கள் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், கிலோகணக்கில் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,400 கோடிக்கும் மேல் வரி செலுத்தாமல் சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையைத் தொடர்ந்து, ஜெயா டி.வி-யின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் உள்பட 355 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. விவேக்கை கையோடு அழைத்துச்சென்று, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.சம்மன் அனுப்பப்பட்டுள்ளவர்கள், ஒருவர் பின் ஒருவராக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிவருகிறார்கள். நேற்று, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் 3 பேர், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா ஆகியோர், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. ஜெயா டி.வி. மேலாளர் நடராஜனும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார். அவரிடமும் விசாரணை நடக்கிறது. சசிகலா, தன் கணவர் ம.நடராசனைப் பார்க்க பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் வந்தபோது, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்தில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இளவரசி மகள்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்! #ITRaid
TAGS :
COMMENTS