[ad_1]
சசிகலா, தினகரன் வீடுகள், அலுவலகங்கள், அவர்களுடைய உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எனப் பல பகுதிகளில் மத்திய வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திவருகிறார்கள். அதையடுத்து ஈரோடு, நாமக்கல் பகுதிகளிலும் ரெய்டு நடந்துவருகிறது.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் நடைபெற்று வந்தபோது, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் டீம் தலைவராக இருந்தவர், வழக்கறிஞர் செந்தில். இவர் தற்போது, சசிகலா ஆதரவாளராக இருந்துவருகிறார். நாமக்கல்-மோகனூர் ரோட்டில் முருகன் கோயிலுக்குப் பின்புறமாக இருக்கும் இவருடைய வீட்டில், வருமான வரித்துறையினர் காலையிலிருந்து ரெய்டு நடத்திவருகிறார்கள். வழக்கறிஞர் செந்திலின் தொழில் பார்ட்னர் சுப்பிரமணியம். இவர், விஜயலட்சுமி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார். சுப்பிரமணியத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்திவருகிறார்கள்.செந்திலிடம் ஜூனியர் வழக்கறிஞராக இருக்கும் பாண்டியன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசு தேர்வு வாரிய உறுப்பினர் எ.வி. பாலுசாமி வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்திவருகிறார்கள். தற்போது, நாமக்கல்லில் மட்டும் மொத்தம் 4 இடங்களில் மத்திய வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திவருகிறார்கள். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் உள்ள தினகரனுக்குச் சொந்தமான சாரதா பேப்பர் மில்லிலும் மத்திய வருமான வரித்துறையினர் காலையிலிருந்து ரெய்டு நடத்திவருகிறார்கள்.இதுபற்றி தினகரன் அணியின் சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், ''இது மத்திய அரசின் திட்டமிட்ட சதி. சசிகலா, தினகரன் குடும்பத்தினர் அரசியல் செய்யக்கூடாது என்பதற்காகச் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தினார்கள். அடுத்த கட்டமாக எங்கள் அணியினரை மிரட்டி அரசியலிலிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். இவர்களின் சதி வேலைகள் ஒருபோதும் எங்களிடம் பலிக்காது'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஜெயலலிதா வழக்கறிஞர் வீட்டிலும் ஐடி சோதனை! #ITRaid
TAGS :
COMMENTS