[ad_1]
கடந்த சில நாள்களாக வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.
உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்றத் தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தையும் கடந்து இன்றைய இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 45.63 புள்ளிகள் உயர்ந்து 33,731 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.70 புள்ளிகள் சரிந்து 10,451 புள்ளிகளாக உள்ளது.
இந்தியப் பங்குச்சந்தைத் தொடர்ந்து 32,000 புள்ளிகள் அருகிலேயே நிலைத்திருப்பது வணிகர்களை மகிழ்ச்சியிலேயே வைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் மென்தா எண்ணெய் நிறுவன பங்குகள் உச்சத்தில் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, தற்போதைய நிலவரப்படி சிறு நிறுவனங்களில் பங்கு வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுவதாக வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உச்சத்தில் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தை! | Indian share market ends in a positive note
TAGS :
COMMENTS