[ad_1]

ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடித்திருக்கும் இந்தித் திரைப்படம் பத்மாவதி. இதை பாலிவுட்டின் பிரபலமான இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ராஜ்புத் வம்சத்தின் அரசியான பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. அரசி பத்மாவதியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். பத்மாவதி திரைப்படத்தில் ராஜ்புத் வம்சம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துகள் இருக்கின்றன எனச் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடக் கூடாது என எதிர்ப்புக் குரல் வந்தவண்ணமிருக்கின்றன. ராஜ்புத் கார்னி சேனா எனும் அமைப்பு மிக மூர்க்கமாக, தங்கள் உயிரைக் கொடுத்தாவது இத்திரைப்படம் வெளியாவதைத் தடுப்போம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பத்மாவதி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 
பத்மாவதி திரைப்படத்தில் ராஜ்புத் பற்றிச் சர்ச்சை குறித்த கருத்துகள் இருப்பதால், இது வெளியானால் சட்ட ஒழுங்கு சீர்குலையக்கூடும் அதனால் குஜராத் மாநிலத்தில் இந்தத் திரைப்படம் வெளியாவதற்குத் தடை விதிப்பதாகக் கூறியுள்ளது. 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");