[ad_1]

 Chennai: 

உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வளர்ச்சி நோக்கித்  திரும்பி இருக்கும் வேளையில்  ஜி.எஸ்.டி-யால் இந்திய ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி சரிந்திருக்கிறது. ஜி.எஸ்.டி (GST) வரியைத் திரும்ப செலுத்தும் (Rufund) காலதாமதத்தால் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலதனங்களையும், மூலப்பொருட்களையும் பெறுவதில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  இதனால் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி செயல்திறன் 1.14% குறைந்திருக்கிறது. இந்நிலையில் ஏற்றுமதியை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இத்துறையில் உள்ளவர்களிடம் பேசினோம். 





இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல துணை இயக்குநர் ஜெனரல் உன்னிகிருஷ்ணன், "மத்திய அரசு தைரியமாக ஜி.எஸ்.டி-யை செயல்படுத்தி இருப்பது பாராட்டியாக வேண்டும். தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஜி.எஸ்.டி-யில் உள்ள குறைகளைக் களைந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி அமைப்பில் உள்ள அனைத்து பிரச்னைகளும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் தீர்வு காணப்படும் என நம்பலாம். 

நாங்களும் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து ஜி.எஸ்.டி-யினால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை அறிந்திருக்கிறோம். எங்கள் அமைப்புடன் ஏற்றுமதியாளர்கள் வாட்ஸ் அப், குறுஞ்செய்தி, இ-மெயில் மூலமும் ஜி.எஸ்.டி-யினால் எதிர்கொண்டிருக்கும் பாதிப்பை எங்களோடு பகிர்ந்து வருகின்றனர். இதனை ஆராய்ந்து மத்திய அரசுக்குப் பல பரிந்துரைகளை வழங்கி இருக்கிறோம். இதனை ஏற்று ஜி.எஸ்.டி கவுன்சில் வரி விகிதத்தை மாற்றி அமைத்திருக்கிறது. ஏற்றுமதி சரிவுக்கு ஜி.எஸ்.டி வரியைத் திரும்ப செலுத்துவதில் உள்ள கால தாமதமே காரணம் என்பதையும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். மத்திய அரசு, உடனடியாக நிவாரணம் வழங்கவும் நீண்ட கால நோக்கில் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறவும் இரண்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். 

விற்பனையில் இழந்த தொகையை மீட்டெடுக்கும் வகையில் விற்பனைக்கான பொருட்களை வாங்கும்போது ஜி.எஸ்.டி வரி 5 சதவிதத்திலிருந்து 0 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஏற்றுமதி துறைக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும், ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கவும் முடியும். 

ஏற்றுமதி வணிகம் செய்பவர்கள் சாதாரணமாக ஜி.எஸ்.டி வரி 0.1% மட்டும் செலுத்தி உள்நாட்டில் மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ஏற்றுமதி பிரிவில் உள்ள 45 சதவிதத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பயன்பெறுவார்கள். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து இ-வேலட் முறையை அறிமுகப்படுத்தப்படும்போது ஏற்றுமதியாளர்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள்" என்கிறார் உன்னி கிருஷ்ணன். 

கோவை கொடீசியா அமைப்பின் முன்னாள் தலைவர் இளங்கோ, "ஆரம்பத்திலேயே ஜி.எஸ்.டி அமல்படுத்தியபோது நிறைய வேறுபாடுகள் இருந்ததைச் சுட்டி காட்டினோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு கலால் வரி கொண்டு வந்த போது இதுபோன்ற குழப்பம் இருந்தது. அதன்பின்பு ஒவ்வொரு பொருளுக்கும் வரியைக் குறைத்தனர். அதுபோன்ற நிலையே தற்போதும் இருக்கிறது. பலவிதமான பொருட்களுக்குப் பல வரிகள் என்று கொண்டு வந்து அதன்பின்பு வரியைக் குறைத்து வருகிறார்கள். இன்னும் நிறைய சீர்திருத்தம் செய்ய வேண்டும். 

ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி-யை 12-லிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்து இருக்கிறார்கள். இதிலும் வாட் கிரெடிட் எடுத்தால் 12% இல்லையென்றால் 5% என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. வரி குறைப்பிலும் ஒருமித்த நிலையில் இல்லை.  இதைப்போலவே, வாகன உபரி பொருட்களை டிராக்டருக்கு பயன்படுத்தினால் ஒரு வரி, லாரிக்கு பயன்படுத்தினால் ஒரு வரி, இதர வாகனங்களுக்குப் பயன்படுத்தினால் ஒரு வரி என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். இதனை எல்லாம் நடுநிலையாக 18% என்று நிர்ணயித்து இருக்கலாம்.

ஆரம்பத்தில் பொருட்கள் வழங்குவதற்கு அட்வான்ஸ் வாங்கினால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். சிறுதொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்றார்கள். இப்போது எல்லா நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் வாங்கினால் வரி கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவே சர்வீஸ் பிரிவைச் சார்ந்த அமைப்புகள் வரி கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். சேவை (Services) மற்றும் பொருட்களையும் (Goods) ஒரு மாதிரி வித்தியாசம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொல்லி விட்டு இப்போது இதுபோல் செய்கிறார்கள். கோவையில் பெரிய நிறுவனங்களுக்கு சிறுநிறுவனங்கள் சேவைப் பிரிவில் பல பொருட்களைச் செய்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு இல்லாமல் இருக்கின்றனர்.

ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்யும் படிவத்தில் நிறுவனத்தின் அனைத்துத் தகவல்களையும் சேகரிக்கும் வகையில் (Data Collection) அமைத்திருக்கிறார்கள். வரி பெறுவதில் கவனம் செலுத்துவதற்கு பதில் நிறுவனத்தின் தகவலைச் சேகரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வரிதாக்கல் படிவத்தை நிரப்புவதற்கே நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அந்தளவுக்கு கடினமாக இருக்கிறது. இதனால் சிறுதொழில் முனைவோர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இனியாவது, வரி தாக்கல் படிவத்தை எளிமைப்படுத்த வேண்டும். 

பொருளைத் தயாரிப்பவர் மூலப்பொருள் தருபவர் வரி கட்டி இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். இதுவும் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம். மூலப்பொருளை வழங்குபவர் வரி கட்டுகிறாரா என்பதை வரித்துறை மட்டுமே கவனித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருட்கள் தருபவர் வரி கட்டுவதை உற்பத்தி நிறுவனங்கள் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்பதையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதனை எல்லாம் அரசு களைந்து சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஜி.எஸ்.டி வரவேற்பை பெற முடியும்" என்கிறார் இளங்கோ.  


தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு  கவனித்து நடவடிக்கை எடுத்து வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");