[ad_1]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருச்சி வழியாக காரில் சென்ற தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் குண்டூர் ஊராட்சியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரிய, சந்தூரணி குளத்தை, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கே.என்.சேகரன், அன்பில் பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி சகிதமாகப் பார்வையிட்டார்.
அதன்பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏரி, குளங்கள் தூர்வாரப் ட வேண்டும். இதைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கவலைப்படவில்லை. ஏரி, குளங்கள் குடிமராமத்து பணிக்காக ஒதுக்கிய நிதியை என்ன செய்தார்கள். சேலத்தில் நேற்று முதல்வர் பழனிசாமி, பருவமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சேலம் மாவட்டம் மற்ற மாவட்டத்துக்கு முன்னோடி மாவட்டமாக விளங்க வேண்டும் எனப் பெரிய நாடகத்தை நடத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான பொய்யை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
குடிமாரத்து பணிக்காக 400 கோடி செலவு செய்ததாகக் கூறி இருப்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 'நீர்நிலைகள் குடிமராமத்துப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை. தூர் வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எடப்பாடி அரசு பேரம் பேசி அரசின் கஜானாவை தூர் எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். குட்கா ஊழல் செய்தவர்கள் குடிமராமத்து பணியில் ஊழல் செய்து இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடத்தினாலும் சந்திக்க தயார் .
ஒ.என்.ஜி.சி-யில் தமிழக அரசு பேரம் பேசி லஞ்சம் பெற்று நிதி வாங்கியிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது. 39 இடத்தில் ஆய்வு செய்ய அனுமதித்து இருக்கிறார்கள். தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜு வெள்ளம் வந்தால் தெர்மாகோலை வைத்து சிறப்பாகச் செயல்படுவாரே'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நீர் நிலைகள் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - மு.க.ஸ்டாலின் | Fraudulent practices in the funds allocated for the Water bodies
TAGS :
COMMENTS