[ad_1]
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் வங்கி முன் வரிசையில் நின்று அழுது கண்ணீர் வடித்தவர், இன்று அந்த நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. பண மதிப்பிழப்பால் சாமானியர் அடைந்த பாதிப்புகள் பல. அவர்கள் ஒரு புகைப்படத்தை மறந்திருக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்தில், பணத்தை மாற்ற முடியாததால் வங்கி முன் வரிசையில் ஒரு முதியவர் நின்று அழும் புகைப்படம் அது. இந்தப் புகைப்படம் அப்போது வேகமாகப் பரவியது. சமூக வலைதளவாசிகள் இன்று இந்தப் புகைப்படத்தை தங்கள் பக்கத்தில் வெளியிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
WATCH: Nand Lal (ex-Serviceman clicked in iconic #demonetization pic) praises the Government (NOTE: Strong Language) pic.twitter.com/ik4vaHYNvF
— ANI (@ANI) November 8, 2017
புகைப்படத்தில் இருக்கும் முதியவர், டெல்லி குருகிராமில் வசித்துவருகிறார். அவருடைய பெயர் நந்த் லால். 79 வயதான இவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அன்று அழுது கண்ணீர் வடித்த நந்த் லால், இப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரிக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்!
நந்த் லாலை பல ஊடகங்கள் பேட்டிகண்டு செய்தி வெளியிட்டுள்ளன. அந்தப் பேட்டிகளில் ,பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரிப்பதாக நந்த் லால் கூறியுள்ளார். பிரதமர் மோடியையும் அவர் புகழ்ந்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அன்று அழுகை, இன்று ஆதரவு! - வைரலான முதியவரின் மனமாற்றம் #Demonetization | #Demonetisation
TAGS :
COMMENTS