[ad_1]



தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையின் தென்மேற்கு கடல் அருகே 29-ம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியது. இது மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து 30-ம் தேதி காலை (இன்று)ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது. இது இலங்கையின்  காலி( Galle ) பகுதியில் இருந்து தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்காக 170 கி.மீ தூரத்திலும், மினிகாய் தீவில் இருந்து கிழக்குதென்கிழக்கு பகுதியில் 600 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்தமானது, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து  30-ம் தேதி மாலை 5.30- மணிக்கு மேல் ஒகி புயல் ஆக மாறுகிறது.


புயல் காற்று

புயலாக மாறும் போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்கக்கூடும். ஒகி புயல் தொடர்ந்து டிசம்பர் ஒன்றாம் தேதி காலை வரை நீடிக்கும். ஒன்றாம் தேதி மாலை புயல் சின்னமானது தீவிரப் புயல் சின்னமாக மாறக் கூடும். ஒகி புயல் சின்னமாக மாறும் போது காற்றி வேகம் மேலும் அதிகரிக்க க் கூடும். தீவிரப் புயல் சின்னம் மூன்றாம் தேதி காலை வரை நீடிக்கக் கூடும். அப்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழ்நாடு மற்றும் தென் கேரளாவில் மிக கனமழை பெய்யும். லட்சதீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். புயல் சின்னம் காரணமாக லட்சத்தீவுப் பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக் கூடும். தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்படும். சாலைகள் சேதம் அடையக்கூடும். இதனால் லட்சத்தீவு, தென் தமிழகம், தென் கேரளாப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



கன்னியாகுமரியில் பாதிப்பு 

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஒகி புயலாக மாறுவதன் காரணமாக குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. 

கன்னியாகுமரியில் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து நவம்பர் 29-ம் தேதி காலை 8.30 மணி வரை 317.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கமான அளவை விட 26 சதவிகிதம் குறைவு என்ற போதிலும், இப்போது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



தென் மாவட்டங்கள் 


தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு வருடங்களாக அவ்வளவாக பெரும் மழை பெய்யவில்லை. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 29-ம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 403.3 சதவிகிதம் மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 11 சதவிகிதம் அதிகம். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதமாக பெரிதாக கனமழை பெய்யவில்லை. ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கடந்த இரண்டு மாதமாக மழை குறைவாகப் பெய்துள்ளது. இப்போது வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை பெய்து வருகிறது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");