[ad_1]
'ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதற்கு குஜராத் தேர்தலே காரணம்' என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். அதற்கு, பா.ஜ.க தேசியத்தலைவர் ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார். இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் ராஜா கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதற்கு குஜராத்திற்கு நன்றி! நாடாளுமன்றமும் காமன்சென்ஸும் செய்ய முடியாததை குஜராத் தேர்தல் செய்துவிட்டது” என்று சிதம்பரம் கூறியிருந்தார்.
ப.சிதம்பரத்தின் இந்தப் பதிவுக்கு, பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். “பொருள்களுக்கான வரியைக் குறைத்து, ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே இமாச்சலப்பிரதேச தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ப.சிதம்பரத்தின் விமர்சனம் எந்த அர்த்தமும் அற்றது என்பதை இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் அடையப்போகும் தோல்வி அவருக்கு உணர்த்தும்” என்று ஹெச்.ராஜா பதில் கூறியுள்ளார்.
இமாச்சலில் காங்கிரஸ் தோல்வி அடையும்! ஹெச். ராஜா ஆரூடம் | Congress Will Loss Himachal Pradesh Election
TAGS :
COMMENTS