[ad_1]



சென்னையில் நேற்று மாலையிலிருந்து தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையின் பல இடங்களில் 150 மி.மீ அளவுக்கு அதிகமாகவும் மழை பெய்துள்ளது எனவும்  `தமிழ்நாடு வெதர்மேன்' தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு பருமழையின் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று (02-11-2017) காலையிலிருந்து மழை சற்று விட்டுவிட்டு பெய்தது. ஆனால், நேற்று மாலையிலிருந்து தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னையின் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையின் பல இடங்களில் 150 மி.மீ அளவுக்கு அதிகமாகவும் மழை பெய்துள்ளது எனவும்  `தமிழ்நாடு வெதர்மேன்' தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



சென்னை நகரின் மழையின் அளவுகள் :

நுங்கம்பாக்கம் - 158 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி)- 157 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 133 மி.மீ
விமானநிலையம் (மீனம்பாக்கம்) - 124 மி.மீ 
தரமணி - 121 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 100 மி.மீ 
திருப்போரூர் (கோவளம்) - 100 மி.மீ