[ad_1]
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27-ம் தேதி தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக மழை வெளுத்து வாங்கிவருகிறது. அதேபோல, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் வியாழன் மாலை 5 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால், போக்குவரத்து முடங்கியது. சென்னையில் 122 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இப்படி, தொடர் கனமழை பெய்து வரும் சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை! #ChennaiRains
TAGS :
COMMENTS