[ad_1]
கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டவில்லையென்றால் சினிமா துறையை இழுத்து மூட வேண்டியது தான் என்று இயக்குநர் அமீர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் மேனஜேர் பா.அஷோக் குமார் இன்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் சசிகுமாரின் உறவினரும் ஆவார். கந்துவட்டி கொடுமையின் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் திரைப்படத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் அமீர், கரு.பழனியப்பன் ஆகியோர் மறைந்த அஷோக் குமாரின் உடலைக் காண மருத்துவமனைக்குச் சென்றனர்.
அப்போது பேசிய அமீர், 'அஷோக் குமாரின் தற்கொலைக் காரணமான அன்பு செழியன் மீது 306-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கந்துவட்டி கொடுமையால் சினிமாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பிரச்னைகளை வெளியில் சொல்வதில்லை. படத்தில் மட்டுமே வீர வசனம் பேசுகின்றனர். கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டவில்லையென்றால் சினிமா துறையை இழுத்து மூடவேண்டியதுதான். தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இதுகுறித்து கலந்துஆலோசிக்கவேண்டும். இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டமுடியாதவர்களுக்கு சங்க நிர்வாகிகளாக இருப்பதற்கு தகுதி கிடையாது' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சினிமாத் துறையை இழுத்து மூடவேண்டியதுதான்..! அமீர் வேதனைக் குரல்
TAGS :
COMMENTS