[ad_1]



தமிழக மீனவர்களை இந்தி பேசச் சொல்லி  நடுக்கடலில் துன்புறுத்தி துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது இந்திய  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து சேலம் நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 70-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் கொடிகளை ஏந்தியவாறு `மத்திய அரசே! இந்திய கடலோர காவல் படையினர் மீது உடனே நடவடிக்கை எடு!' என்று முழுக்கமிட்டார்கள்.  


இதில் பேசிய சேலம் தெற்கு மாவட்ட இணை செயலாளர் அரவிந்த், `இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒரு மாநிலமாக இருந்து வருகிறது. தமிழக மக்களும் இந்தியா என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள். தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இந்தி பேசச் சொல்லி இந்திய கரலோர காவல் படையினர் தமிழக மீனவர்களை சுட்டிருப்பது இந்திய இறையாண்மைக்கே கேடு விளைவிக்கும் செயலாக இருக்கிறது.




தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை ராணுவம் சுட்டு வந்த நிலையில்  தற்போது தமிழக மீனவர்களை  இந்திய கடரோர காவல் படையினர் சுட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. தமிழக அரசு இதற்கு தீவரமான நடவடிக்கை எடுக்காமல் வழக்கம் போல கடிதம் எழுதி வருகிறது.
இந்த செயலில் ஈடுபட்ட கடலோர காவல் படையைச் சேர்ந்தவரை உடனே பதவி நீக்கம் செய்வதோடு இந்திய கடலோரக் காவல் படை தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");