[ad_1]
Chennai:
''எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்துக்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் சார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர்'' என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 36-வது சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சார்ஜா புத்தக ஆணைக்குழுவுக்கு 1000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''சார்ஜாவின் அரசர் சுல்தான் வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தக திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் சார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டுக்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.
எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்துக்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் சார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர். பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியது 1949-ம் ஆண்டுதான் என்றாலும், 1948-ம் ஆண்டே ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்போம்’ என்ற பிரசாரத்தை தொடங்கினார்.
உலக அளவில் நான்காவது மிகப்பெரிய புத்தக திருவிழாவாக விளங்கிய சார்ஜா புத்தக திருவிழா, ஒரே வருடத்தில் மூன்றாவது பெரிய புத்தக திருவிழாவாக இவ்வருடம் இடம் பிடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வெகுவிரைவில் இந்த புத்தக திருவிழா சர்வதேச அளவில் முதல் இடம் பெற்றிட தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும், தமிழினத் தலைவர் கருணாநிதி சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் இதயமார்ந்த வாழ்த்துகள்.
கடந்த தி.மு.க ஆட்சியின்போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்’ ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிச்சயம் கழக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும். அப்படி அமைக்கப்படும் வாரியத்தில் அமீரகத்திலும் உங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி இருப்பார் என்கிற உறுதியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர் சார்ஜா சுல்தான்'- மு.க.ஸ்டாலின் பேச்சு
TAGS :
COMMENTS