[ad_1]
ஹைதராபாத் தொகுதி எம்.பி.யும் மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சி தலைவரான அசாதுதீன் உவைசி அதிரடியான கருத்துக்களைக் கூறி அவ்வப்போது பரபரப்பை கிளப்புபவர். அவர் வரும் 19-ம் தேதி ஓசூருக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
குறிப்பாக 'வீடு திரும்புதல்' என்ற பெயரில் இந்து மத அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் குறித்துத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அசாதுதீன் உவைசி, ஒவ்வொருவரும் முஸ்லிமாகவே பிறந்து அதன்பின்னரே பிற மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்று எல்லாம் கூறி பரபரப்பை கிளப்பியவர்.
இப்படிப்பட்ட அதிரடி அரசியல் தலைவரைதான் ஓசூரில் நவம்பர் 19-ம் தேதி சிறப்புறை ஆற்ற இந்தியாவின் அக்னி பிரவேசம், மார்க்கத்தின் சிங்கம் என்று எல்லாம் விளபம்பரப்படுத்தித் தமிழக மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சி துணை செயலாளர் இம்தீயாஸ் என்பவர் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
தகவல் அறிந்த பி.ஜே.பி., இந்து முன்னனி, அகில இந்திய விஷவ இந்து பரிஷத், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, இந்து மக்கள் கட்சி என எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து அசாதுதீன் உவைசி கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புகார் மனு கொடுத்துள்ளனர். மீறி அசாதுதீன் உவைசி வருகை தந்தால் அன்றைய தினம் நாங்கள் பந்த் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. அதைத் தடுக்க முடியாது என்று ஓசூர் பொறுப்பு டிஎஸ்பி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர், இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளை அழைத்துப் பேசி வருகின்றார். முஸ்லிம் அமைப்புகள் எந்தப் பிரச்னையுமின்றிக் கூட்டம் நடத்துவோம் என்று கூட்டத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று நிற்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையே அடுத்து என்ன செய்வது என்று தெளிவான முடிவு எடுக்க முடியாமல் பதற்றத்தில் உள்ளனர். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் அசாதுதீன் உவைசிக்கு வரவேற்பு அளித்துச் சுவர் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் உவைசி வருகை... பதற்றத்தில் ஓசூர்!
TAGS :
COMMENTS