[ad_1]





இந்து மக்கள் மட்டும்தான் இந்தியா என்று பா.ஜ.க நினைக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 





தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மரகதம் சந்திரசேகரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 'பா.ஜ.க. இந்தியாவை ஆளும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் நம்மை போன்ற அந்த பெருமை அவர்களுக்கு உண்டா?



அந்தக் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தலைவர்களாக இருக்கிறார்களா? கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்களா? இந்து மக்கள் மட்டும் தான் இந்தியா என்று நினைக்கும் கட்சி அது. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் கட்சி என்றால் அது காங்கிரஸ் தான். மக்களிடையே பிளவை பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். நிதானமான தலைவர்கள் உருவாக வேண்டும். நிதானமான தலைவர்கள் போர்க்குரல் எழுப்ப வேண்டும்.

வாஜ்பாய், அத்வானி இருந்த பா.ஜ.க. வேறு. இப்போது இருக்கும் பா.ஜ.க. வேறு. இப்போது இருக்கும் பா.ஜ.க. எந்த அரசியல் நெறிகளையும் கடைப்பிடிப்பதில்லை. அவர்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றால் நமக்கு போர்க்குணம் வர வேண்டும். போர்க்குணம் கொண்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். இந்த இளைஞர்கள் கூட்டம் அனைத்து சமுதாயத்தில் இருந்தும் வர வேண்டும்' என்று தெரிவித்தார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்