[ad_1]
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகர் திலீப்பிடம், கேரள போலீஸார் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் சென்ற ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்கமாலி சிறையில் அடைக்கப்பட்டார். திலீப்பின் ஜாமீன் கோரிக்கைகளை அங்கமாலி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்து கடந்த அக்டோபர் 3-ம் தேதி திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். 85 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின், அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
நடிகை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட அன்று, தான் ஆலுவாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக ஒரு மருத்துவச் சான்றிதழை திலீப் அளித்திருந்தார். அது, போலியானது என்று போலீஸார் கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், திலீப் அன்று மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஆனால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆலுவா போலீஸார் இன்று, திலீப்பை மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். காலை 10 மணிக்கு விசாரணை துவங்கியது. ஆலுவா போலீஸ் எஸ்.பி., சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ பவுலோஸ் ஆகியோர் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெற்றது. போலி மருத்துவச்சான்றிதழ்குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நடிகை கடத்தல் வழக்கு! விசாரணை வளையத்தில் மீண்டும் திலீப்
TAGS :
COMMENTS