[ad_1]

கியூபாவில் காஸ்ட்ரோ சகாப்தம் விரைவில் முடிவுக்கு வருகிறது.
 






கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. நீண்டகாலம் கியூப அதிபராக இருந்த ஃபிடல், வயது மூப்பு காரணமாக 2008-ம் ஆண்டில் தன் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார். கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இப்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோ வரும் பிப்ரவரி மாதத்தில் அதிபர் பொறுப்பை துணை அதிபர் மிகுவேல் டையாஸிடம் ஒப்படைக்க இருக்கிறார்.அதற்கு முன்னோட்டமாக கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கியூபாவில் நேற்று நடைபெற்றது. கியூபாவில் பொதுமக்கள் வாக்களிக்க வாய்ப்புள்ள தேர்தல் இது மட்டுமே ஆகும். பொதுமக்களின் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களை தேர்வு செய்வார்கள்.  வரும் பிப்ரவரி மாதத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது மிகுவேல் டையாஸ் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரவுல் காஸ்ட்ரோ அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட இருக்கிறார். ஏனெனில், ரவுல் காஸ்ட்ரோவுக்கு இப்போது 86 வயதாகிறது. அதனால் வேறொருவருக்கு வழிவிட்டு விலகுகிறார். ஆக, ஆட்சி அதிகாரத்தில் காஸ்ட்ரோ சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. எனினும், 2021-ம் ஆண்டு வரை கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ரவுல் காஸ்ட்ரோ பதவி வகிப்பார். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");