[ad_1]
பேராசிரியர் பணி நியமன இட ஒதுக்கீட்டில் ஊழல் செய்த, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பதவி நீக்கம் செய்து, கைதுசெய்யக்கோரி சமூக நீதிக்கட்சி சார்பாக, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் பணி நியமனங்களில், மெகா ஊழல் செய்ததாக, அதன் துணைவேந்தர் கணபதிமீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, "தனக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை இருந்தும் பணி நியமன ஆணை வழங்கவில்லை. யு.ஜி.சி-யின் டாக்டரல் ஃபெலோஷிப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும், பல்கலைக்கழகம் யு.ஜி.சி-க்கு பரிந்துரை செய்யவில்லை. இதனால், தனக்கு யு.ஜி.சி-யின் விருது கிடைக்கவில்லை. தனது கணவர் வேண்டுமென்றே பணியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று லட்சுமி பிரபா என்பவர் துணைவேந்தர் கணபதிமீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கணபதி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில், துணைவேந்தர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று பாரதியார் பலகலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ள உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், துணைவேந்தர் கலந்துகொள்ள இருப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், துணைவேந்தர் கணபதியைக் கண்டித்து, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே, சமூக நீதிக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். "கணபதியின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநர் வருகையின்போது, கறுப்புக் கொடி காட்ட உள்ளோம். துணைவேந்தர் மீது, ஆளுநர் தகுந்த நடவடிக்கை எடுத்து, நியமனங்களை ரத்துசெய்து, புதியதாக நியமனத்தை தகுதி அடிப்படையில் நடத்த வேண்டும், துணைவேந்தர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக நீதிக் கட்சியினர் வலியுறுத்தினர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பேராசிரியர் பணி நியமனத்தில் ஊழல்: பாரதியார் பல்கலை துணைவேந்தருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
TAGS :
COMMENTS