[ad_1]





Chennai: பாகிஸ்தான் டிஃபன்ஸ் (Pakistan Defence) என்ற டிவிட்டர் பேஜ் காவல்ப்ரீத் கவுர் என்ற டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரின் போஸ்டை மார்ஃபிங் செய்து தவறான தகவலை பரப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடி மூலம் வதந்திகளை பரப்புவது அவதூறான செய்திகளை வெளியிடுவது பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே ட்விட்டரில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அரசு செய்தி தொடர்புத் துறையின் டிவிட்டர் பக்கங்கள் வெரிஃபைடு அக்கவுன்ட் எனப்படும் உறுதி செய்யப்பட்ட அக்கவுன்ட் மூலம் செயல்படுவர்.




இந்நிலையில் பாகிஸ்தான் டிஃபன்ஸ் (Pakistan Defendce) எனப்படும், பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பில்லாத ட்விட்டர் பேஜ் ஒன்றிலிருந்து தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கம், பாகிஸ்தான் அரசுடன் தொடர்புடையதில்லை என்றாலும், பாகிஸ்தான் ராணுவத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் அதன் மெம்பர்களாக உள்ளனர். இதனால்தான், இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவல்ப்ரித் கவுர், ட்விட்டரில் சில மாதங்களுக்கு முன்னர், `நான் ஒரு இந்திய நாட்டின் பிரஜை. நான் என் தேசத்தின் சட்டமைப்பிலுள்ள மதச்சார்பின்மையை பெரிதும் மதிக்கிறேன். இஸ்லாமியர்களுக்கதிராக நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக எழுதுவேன்' என்று கூறியிருந்தார்.

 



இந்த பதிவை மார்ஃபிங் மூலம் மாற்றி பதிவிட்டது பாகிஸ்தான் டிஃபன்ஸ். அந்த பதிவை மார்ஃப் செய்து, "நான் இந்திய நாட்டின் பிரஜை. நான் இந்தியாவை வெறுக்கிறேன். ஏனென்றால், காஷ்மீர், கோவா, மிசோரம், மணிப்பூர், சிக்கிம் போன்ற பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் காலனித்துவ நாடு இந்தியா" என பதிவிட்டுள்ளது. இது குறித்து பலர் புகார் அளித்த பின் அந்த ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் சஸ்பெண்டு செய்யப்பட்டள்ளது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");