[ad_1]
தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் 6வது சம்பள உயர்வு கமிஷன் மூலம் சீனியர், ஜூனியர் சம்பளம் முரண்பாடு ஏற்பட்டது. அதாவது சீனியரை விட ஜூனியருக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது. அதை அரசு நீக்கி அனைவருக்கும் சமமான சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சி துறையில் பணி புரியும் ஊழியர்களில் சீனியர், ஜூனியர் சம்பளம் வேறுபாடு இருந்தும் இன்று வரை அவர்களுக்கு சமமான சம்பளம் வழங்கப்படவில்லை என்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பட்டு வளர்ச்சி துறையின் இயக்குநர் அலுவலம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.
இதுப்பற்றி தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் ஓய்வூதிய சங்க ஒருங்கிணைப்பாளர் மணி, ''தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை. பணி புரியும் சீனியர், ஜூனியர்களின் சம்பளம் வேறுபாடு இருக்கிறது. ஜூனியர்களுக்கு அதிக சம்பளமும், சீனியர்களுக்கு குறைவான சம்பளமும் வழங்கப்படுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக போராடி பார்த்துவிட்டோம். இன்னும் எங்களுக்குச் சமமான சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பள ஏற்றத் தாழ்வில் பாதிக்கப்பட்டு பலர் ஓய்வும் பெற்றுவிட்டார்கள். நாங்கள் ஓய்வு பெற்றவர்கள், சம்பள முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 400 பேருக்கு மேல் இருக்கிறோம். எங்களை அரசு கவனத்தில் கொண்டு ஜூனியர், சீனியர் சம்பள வேறுபாட்டை நீக்கி எங்களுக்கு முறையாக வர வேண்டிய தொகையை உடனே வழங்க வேண்டும்'' என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஓய்வு பெற்ற பட்டு வளர்ச்சி துறை ஊழியர்கள் போராட்டம்
TAGS :
COMMENTS