[ad_1]
இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரம் முதல் இடத்தில் உள்ளது.
வடஇந்திய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்துவருகிறது. சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று நச்சாகி வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் திண்டாடி வருகிறது. பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் அறுவடைக்குப்பின் எஞ்சும் பயிரை அதிக அளவில் தீயிட்டு எரிப்பது வட இந்திய நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகும். இதற்குத் தீர்வு காணும் வரை இந்தப் பிரச்னை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இந்நிலையில் இந்திய நகரங்களில் காற்றின் தரக்குறியீட்டு விவரத்தை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரம் 491 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. குருகிராம் 480 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தலைநகர் டெல்லி 468 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. லக்னோ, கான்பூர் நகரங்கள் அடுத்த இடத்தில் உள்ளன.
வட இந்திய நகரங்களின் மிகப்பெரும் பிரச்னையாக காற்று மாசுபாடு உருவெடுத்துவருகிறது. காற்று மாசுபாடு காரணமாக நியூயார்க்-டெல்லி விமான சேவையை அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நேற்று நிறுத்தியது குறிப்பிடத்தது.
காற்று மாசுபாட்டில் வாரணாசி நகருக்கு முதலிடம்!
TAGS :
COMMENTS