[ad_1]





2017-ம் ஆண்டின் ’மிஸ் யூனிவர்ஸ்’ மகுடத்தை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய் நெல் பீட்டர்ஸ் தட்டிச் சென்றுள்ளார்.


 


பிரபஞ்ச அழகியைத் தேர்வு செய்யும் விழாவுக்காக நேற்று இரவு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், ஜமைக்கா என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 92 பெண்கள் பங்கேற்றிருந்தனர்.  கொலம்பியாவைச் சேர்ந்த லாரா ஜமைக்காவைச் சேர்ந்த டாவின்னா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. பலகட்ட போட்டிகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அழகி டெமி லெய் நெல் பீட்டர்ஸ் தலையில் பிரபஞ்ச அழகிக்கான மகுடம் வைக்கப்பட்டது. 22 வயதான டெமி வணிக மேலாண்மை படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 


Congratulations to Demi-Leigh Nel-Peters, the winner of the 2017 #MissUniverse competition! pic.twitter.com/JYuQYc3Lvo
— Miss Universe (@MissUniverse) November 27, 2017



மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள டெமியிடம் நடுவர்கள் முன்வைத்த கேள்வியும் பதிலும்...பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை எது?”ஒரு சில நிறுவனங்களில் ஆண்கள் செய்யும் அதே பணியைதான் பெண்களும் செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 75% தான் வழங்கப்படுகிறது. இது சரியான முறை அல்ல”இவ்வாறு டெமி பதிலளித்துள்ளார். இந்த ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியின் முதல் ஐந்து இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");