[ad_1]





தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று, ராஜஸ்தான் பத்திரிகை ஒன்று ராஜஸ்தான் அரசின் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலையங்கப் பகுதியைக் காலியாக வெளியிட்டுள்ளது. 





ராஜஸ்தானில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக, வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளார். ராஜஸ்தான் அரசு, செப்டம்பர் 6-ம் தேதி அவசரச்சட்டம் ஒன்றை வெளியிட்டது. இந்தச் சட்டம் அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குகிறது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மீதான புகார்கள் மீது அனுமதி தந்தால்தான் விசாரணை நடத்த இந்தச் சட்டம் வகைசெய்கிறது. அதுவரை அது சம்பந்தமான செய்திகளை ஊடகங்கள் வெளியிடவும்  இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.
ராஜஸ்தான் அரசின் இந்தச் சட்டம், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என்று எதிர்க்குரல்கள் எழுந்துவருகின்றன. இந்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் முன்னணி இந்திப் பத்திரிகையான “ராஜஸ்தான் பத்திரிகா” இந்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. அந்தவகையில், தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று, அந்தப் பத்திரிகையின் தலையங்கப் பகுதி காலியாக விடப்பட்டது. சுற்றி கறுப்புக் கோடு மட்டும் போடப்பட்டிருந்தது. தலையங்கப் பகுதிக்கு, “கறுப்புச்சட்டம்” எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");