[ad_1]

Chennai: நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறம் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர்களில் நடிகை நயன்தாரா இன்று இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். 




மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... 


'அறம்' திரைப்படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை மீட்கும் போராட்டமே இந்தப் படத்தின் கதை. கதையின் ஊடே சமூகப் பிரச்னைகளையும் இந்தப் படம் பேசி உள்ளதால், நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை, சென்னை கே.கே.நகர் காசி திரையரங்கில் இன்று, ரசிகர்களுடன் நடிகை நயன்தாரா பார்த்தார். நயன்தாராவைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். பின்னர், நயன்தாரா உதயம் திரையரங்கிற்குச் சென்று, அங்கும் சிறிது நேரம் ரசிகர்களுடன் 'அறம்' படத்தைப் பார்த்தார்.