[ad_1]
'அருண் ஜெட்லியை நிதியமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும்' என்று பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் தள்ளியது என்று யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசைக் கடுமையாகச் சாடி இருந்தார். இந்நிலையில், ஜி.எஸ்.டி விவகாரத்திலும் அரசின்மீது பாய்ந்துள்ளார் சின்ஹா.
பீகார் முன்னாள் சபாநாயகர் உதய் நாராயண் ஏற்பாடுசெய்திருந்த இடஒதுக்கீடு தொடர்பான நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்ஹா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ’நிதியமைச்சர் என்ற வகையில் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதன் முக்கியப் பொறுப்பை அருண் ஜெட்லி ஏற்க வேண்டும். இன்று அமலில் உள்ள ஜி.எஸ்.டி, ஏராளமான பிழைகளுடனும் தவறுகளுடனும் உள்ளது. இதனால், ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கூட்டி, வரி விதிப்பில் அடிக்கடி திருத்தம் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரைமுறைகள் உருவானபோது, அதை அருண் ஜெட்லி முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன். அதனால்தான் அடிக்கடி திருத்தம் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. ஆகவே, பிரதமர் மோடி அருண் ஜெட்லியை நீக்கிவிட்டு வேறொருவரை நிதியமைச்சராக நியமிக்க வேண்டும்’ என்றார்.
அருண் ஜெட்லி பதவியைப் பறிக்க வேண்டும்! யஷ்வந்த் சின்ஹா அடுத்த அதிரடி
TAGS :
COMMENTS