[ad_1]





உத்தரப்பிரதேச மாநிலம், சொன்பத்ரா ரயில் நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


 


உ.பிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த அக்டோபர் 22ம் தேதி ஆக்ரா அருகில் உள்ள பதேபூர் சிக்ரி என்ற பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது. அதில் படுகாயம் அடைந்த தம்பதியினர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்த சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரப்பிரதேச மாநில அரசிடம் அறிக்கை கேட்டார். ’சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார். ஸ்விஸ் தம்பதி தாக்கப்பட்டது தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இன்று காலை சொன்பத்ரா ரயில் நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  தொடர்பாக உ.பி போலீஸ் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும்ம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.  
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்