[ad_1]
ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்குப் பெருந்தன்மை காட்ட வேண்டுமென, தண்டனை அளித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபர் 18-ம் தேதி எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, ''நீண்ட காலம் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க 2014-ம் ஆண்டு தமிழக அரசு முயன்றபோது, மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தற்போது, நீங்கள், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு அவர்களை விடுவிக்கும்படி கடிதம் எழுதினால், மத்திய அரசு அவர்களை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்காது. ஏற்கெனவே, நீண்ட காலம் அவர்கள் சிறையில் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தை மனித நேயத்துடன் அணுகவும். அவர்களுக்குத் தண்டனை அளித்த நீதிபதி என்ற வகையில், கைதிகள் விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்'' எனக் கூறியுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே, 1964-ம் ஆண்டு மத்திய அரசால் விடுவிக்கப்பட்டதையும், 14 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் நீதிபதி கே.டி. தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, நீதிபதி கே.டி.தாமஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ''சோனியா காந்தி தலையிட்டாலும் குற்றவாளிக்கு சாதகம் ஏற்படும் என்பதையும் சொல்லிவிட முடியாது. எனினும், கோரிக்கை வைக்க வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. மகாத்மா காந்தியும் நாட்டின் தந்தை, ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தவர். இரு கொலைகளுமே உலகை உலுக்கியவை. எனினும் நேரு, கோபால் கோட்ஸேவை விடுவிக்கவே விரும்பினார். நேரு இறந்த பின்னர், 5 மாதங்கள் கழித்து கோபால் கோட்ஸே விடுவிக்கப்பட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிக்க உதவுங்கள்..! சோனியா காந்திக்கு நீதிபதி கடிதம்
TAGS :
COMMENTS