[ad_1]

தற்கொலை என்கிற வார்த்தையே நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதை சர்வசாதரணமாக பத்து வயது பிஞ்சுகள் செய்துகொள்கிறார்கள் என்பதை நாளிதழில் படிக்கும்போது மனம் பதறுகிறது. தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் டீச்சர் திட்டினார், படிப்பில் அழுத்தம், மற்றவர்கள் முன் டீச்சர் அவமானப்படுத்தினார், பரிட்சையில் தோல்வி, பெற்றோர்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதாகவே இருக்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகள், அதற்குமுன் பெற்றோர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ அதுபற்றி பேசியிருப்பார்கள் அல்லது செய்கைகளால் காட்டியிருப்பார்கள் என்கிறது மருத்துவ உலகம். அதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி சொல்கிறார் உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர். 
        * உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிற நேரம் என்பது மிகக்குறைவே. ஆனால், சிறு குழந்தைகள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. தங்களுடைய செய்கையாலே நமக்கு அவர்களுடைய நிலையைப் புரிய வைத்துவிடுவார்கள்  * தற்கொலை எண்ணத்துக்கு ஆட்படும் குழந்தைகள், பள்ளி மற்றும் வீட்டில் எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள். தன் வகுப்பறையில் நடக்கும் நல்லது கெட்டதுகளைப் பற்றி வீட்டில் வாய் திறக்கமாட்டார்கள். இதுதான் தற்கொலையை நோக்கி அவர்கள் செல்கிறார்கள் என்பதற்கான முதல் அறிகுறி.  * தனிமையில் இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் கதவை அடைத்துக்கொண்டு தன்னை தனிமைச் சிறையில் ஆட்படுத்திக்கொள்வார்கள். தனி அறை இல்லாத வீட்டுக் குழந்தைகளின் கண்கள் கலங்கியபடி இருக்கும். * பெரும்பாலும், இரவுகளில் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள் அல்லது அடித்துப்போட்டது போன்று தூங்குவார்கள்.   * தற்கொலை எண்ணத்துக்கு ஆளாகும் குழந்தைகள், தனக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தத்தை வீட்டிலுள்ளவர்களிடம் காண்பிப்பார்கள். எல்லோரிடமும் எரிந்துவிழுவது, தேவையில்லாமல் சண்டை வளர்ப்பது போன்றவற்றை செய்வார்கள். வீட்டில் பிரச்னை என்றால், வகுப்பறையில் தனக்கு நெருக்கமான ஃப்ரெண்டுகளிடம் எரிந்து விழுவது, கடிந்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.    * பள்ளியில், வகுப்பறையில் தனக்கேற்பட்ட அவமானத்தை வீட்டில் கோவமாக வெளிப்படுத்துவார்கள். தட்டை தூக்கி எறிவது, சாப்பிடாமல் கத்தி கூச்சல் போடுவது என்று நம்மை ஒரு நிமிடம் திணறடிப்பார்கள். இவை வழக்கமான அறிகுறியல்ல என்பதை பெற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை அந்த தருணத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். * எட்டு வயதாக இருந்தாலும் சரி, பத்து வயதாக இருந்தாலும் சரி திடீரென படுக்கையை நனைப்பார்கள். சில குழந்தைகள் காய்ச்சல், தலைவலி என்று அடிக்கடி ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் * ஆஸ்துமா இருக்கும் பிள்ளைகளென்றால்... தற்கொலை எண்ணம் தலைதூக்கும்போது அவர்களுடைய ஆஸ்துமா பிரச்னையும் அதிகமாகும் கவனம்.   * காரணமேயில்லாமல் அடிக்கடி ஸ்கூலுக்கு மட்டம் போட நினைக்கும் குழந்தைகளை... பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிக கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.  * வளர்ந்த பள்ளி மாணவர்களாக இருந்தால், பள்ளி செல்கிறேன் என்று சொல்லிவிட்டு பார்க், தியேட்டர் என்று வேறுவேறு இடங்களுக்குப் பயணிப்பார்கள். இதை கண்டுபிடிக்கும் ஆசிரியர்களும், பெற்றவர்களும் கூடுதல் கவனம் எடுத்து இக்குழந்தைகளை/மாணவர்களை கையாள வேண்டும்.
* குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமான மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணங்களோட இருப்பதாகத் தோன்றினால் உடனடியாக கவுன்சிலிங்குக்கு அழைத்துச் செல்லுங்கள். அது ஒன்றே உங்கள் செல்லங்களை காக்க ஒரே வழி.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");