[ad_1]

Nellai: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணத் திருவிழா, இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.




நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, நவம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன், தினமும் இருவேளையும் காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.  

நவம்பர் 12-ம் தேதி நடைபெற்ற 10-ம் நாள் திருவிழாவில், அம்மன் தவக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார். ரதவீதி வழியாகச் சென்ற அம்மனின் சப்பரம், பேட்டை சாலை, காட்சி மண்டபம் வழியாகச் சென்று, 13-ம் தேதி அதிகாலை, கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்குக் காட்சி கொடுக்கப் புறப்பட்டார். 



பின்னர், நெல்லை டவுனில் உள்ள காட்சி மண்டபத்தில், காந்திமதி அம்பாளுக்கு சுவாமி காட்சியளிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அம்பாள், சுவாமியை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் அம்பாளும் சுவாமியும் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 12-ம் நாளான இன்று அதிகாலையில் நெல்லையப்பர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருமணம் நடைபெற்றது. 


திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் பூ பல்லக்கில் பட்டணப் பிரவேசம், திருவீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வரும் 16-ம் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடைபெறும். பின்னர், 17-ம் தேதி இரவு, சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு, பட்டணப் பிரவேசம், வீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");