[ad_1]



 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று திருப்பூர் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தவர், `தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற வருமானவரி சோதனைகளைப் பார்க்கையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தனது அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துவது நன்றாகவே தெரிகிறது. மத்திய அரசுக்கு எதிராக யார் மாற்றுக் கருத்து தெரிவித்தாலும், அவர்களைப் பணியவைக்க வருமான வரி சோதனையைக் கையில் எடுக்கிறார்கள்.
அத்துடன் தங்களுடைய அரசியல் நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார்கள்.


தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனியாக அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அத்துடன் மாநிலம் முழுக்க இதுபோன்ற நடவடிக்கைகளைதான் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள் முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். மாநில சுயாட்சிக் கொள்கையை விட்டுக் கொடுக்க விரும்பாத எந்தவொரு கட்சியும், ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை ஏற்காது. தற்போது, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு மக்களின் ஆதரவையும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்துவிட்டது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல், உள்ளாட்சி அமைப்புகளும் செயல்பட முடியாமல் முடங்கியிருக்கின்றன. மக்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக  உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும்’ என்றார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");