[ad_1]

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த முறையில் பணி வழங்கிய தனியார் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வரும் செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். சிறப்பு தேர்வு மூலம் தங்களைத் தேர்வு செய்து, இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசு சொன்னதுபோன்றே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இவர்கள் அரசிடம் முறையிட்டு வருகின்றனர். தங்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

சென்னை, தேனாம்பேட்டை மருத்துவ இயக்குநர் அலுவலக வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று இவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.