[ad_1]
கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே, தண்டவாள பராமரிப்புப் பணிகள் நவம்பர் 8 முதல்15-ம் தேதி வரை நடைபெறுவதால், சில ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை - திருச்சி - மயிலாடுதுறை (வண்டி எண்.16233, 16234) விரைவு ரயில் இன்று முதல் 15-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், திருச்சி - தஞ்சை - மயிலாடுதுறை (வண்டி எண். 76824, 76827) பயணிகள் ரயில், வரும் 11-ம் தேதி மட்டும் ரத்துசெய்யப்படுகிறது.
இதுபற்றி ரயில்வே பொறியாளரிடம் கேட்டபோது, ''மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே உள்ள ரயில்வே தண்டவாளப் பணிகள் காலை 7.45 மணி முதல் 11.45 மணி வரை, இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் செல்லும் ரயில்கள் மட்டும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ், 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு, 11.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இது வழக்கமாக நடைபெறும் பணிதான். பயணிகள் இந்தச் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே பராமரிப்புப் பணிக்காக ரயில்கள் ரத்து
TAGS :
COMMENTS