[ad_1]





Madurai: விஜி ஆர்ட் ஃபவுண்டேஷன் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் ஓவியம் மற்றும் கிராஃப்ட் கண்காட்சி நடத்தப்பட்டது. இதை, மதுரை ஸ்டாம்ப் மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்க ஒருங்கிணைப்பாளர் துரை.விஜயபாண்டியனும், வேளாண் கல்லூரி முன்னாள் பதிவாளர் சுவாமியப்பன் ஆகியோர் துவக்கிவைத்தனர். மேலும், காந்தி மியூசியத்தின் காப்பாட்சியர் பெரியசாமி உடன் இருந்தார்.




தனது ஓவியங்களையும் கிராஃப்ட் வொர்க்கையும் மாணவர்களுக்கு விளக்கிய பின், "இந்தக் கண்காட்சி மொத்தம் மூன்று நாள்கள் நடைபெறும். நேற்றே துவங்கிவிட்டது. இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.




இதில் முக்கியமாக, தஞ்சாவூர் பாரம்பர்த்தைப் பறைசாற்றும் விதமான ஓவியங்கள் அதிக அளவு வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் பகுதியை ஆண்ட மன்னர்களின் கொடை, வீரம், பக்தி உள்ளிட்ட பெருமைகளை அடையாளப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் நாம் தெரிந்துகொள்ள முடியும். மேலும், கண்ணாடியில் கற்பனை ஓவியங்களையும் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஓவியங்களையும் தீட்டியுள்ளேன். தென்னம் பாலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தி ஓவியங்களாக வைத்துள்ளேன். மேலும், எனக்குப் பிடித்த ராஜஸ்தான் கலாசாரத்தைப் போற்றும் விதமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளேன்.  அவ்வோவியங்களில், அப்பகுதியில் வாழும் பெண்களின் உடை, நகை, வீட்டுச் சூழல் உள்ளிட்டவற்றை தெரியப்படுத்தியுள்ளேன். மேலும், ராஜஸ்தான் மன்னர்கள் பயன்படுத்திய உடைகளை, அதன் அலங்காரத்தை வரைந்து காட்சிப்படுத்தியுள்ளேன்' என்று தெரிவித்தார் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");