[ad_1]



"உதிரி மல்லிகைப்பூக்களை எடுத்து சாப்பிடலாம். நல்லா இருக்கும்' என்று திவ்யா சொன்னபோது, அவரை அதிர்ச்சியோடு பார்த்தோம். அதைப் புரிந்துகொண்ட அவர், மல்லிகை மொட்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்றார். அதன் பிறகுதான் புரிந்தது, அவை மல்லிகை வடிவில் அமைந்த கேக் க்ரீம்கள் என்பது. 


திவ்யா, தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது கணவர் அருண், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். தற்போது, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் வசித்துவருகிறார்கள்.தமிழக பாரம்பர்ய சின்னங்களான கோயில் கோபுரங்கள், தலையாட்டிப் பொம்மை, தாலி, திருமணத் தாம்பூலம், பட்டுச் சேலைகள், வீணை, சுவாமி சிலைகள் முதலிய வடிவங்களில் கேக்கைத் தயாரித்து அசத்துகிறார். இவர், தனது முகநூலில் பதிவிடும் கேக்கின் புகைப்படங்களுக்கு விழும் லைக்குகளும் கமென்ட்டுகளும் ஏராளம்.



இந்த கேக் தயாரிப்பு பற்றியும் கேக் தயாரிப்பு மீதான ஆர்வம் பற்றியும் திவ்யாவிடம் கேட்டபோது, "எனக்கு சிறுவயதிலிருந்தே சமையல் கலைமீது ஆர்வம் அதிகம். +2 முடித்தவுடன் கேட்டரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், பெற்றோரின் விருப்பப்படி பி.சி.ஏ படித்தேன். படிப்பு முடித்தவுடன் திருமணமும்  நடந்தது. உடனடியாக கணவர்  அருணுடன் அமெரிக்கா பயணம். அங்கு சென்ற பிறகும் சமையல் ஆர்வம் எனக்கு குறையவில்லை. என் கணவரிடம் கூறினேன். அவர் என்னை ஊக்கப்படுத்தி, கேக் தயாரிப்பதற்கான அத்தனை உதவிகளையும் செய்தார்.




முதலில், என் குடும்பத்துக்காகவும் மிஷனில் தங்கியுள்ளவர்களுக்குப் பரிசளிக்கவும் கேக் தயாரிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் என்னுடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நிறையப் பேர் விதவிதமா கேக் செய்றாங்களே... நாமும் வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சேன். நான், சிறு வயதில் என் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்த தஞ்சாவூர் பெரிய கோயிலின்கோபுரம், ரசித்து விளையாடிய தலையாட்டி பொம்மை ஆகியவற்றை கேக்காகச் செய்தேன். படிப்படியாக சுவாமி சிலைகள், திருமணத் தாம்பூலம் உள்ளிட்ட பல வடிவங்களில் கேக்கைத் தயாரித்துள்ளேன். பட்டர் க்ரீம் கேக், வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், கோக்கனட் உள்ளிட்ட பல ஃப்ளேவர்களில் கேக்குகளைத் தயாரித்துள்ளேன். நான் தயாரிக்கும் கேக்குகளில் முட்டை பயன்படுத்துவதில்லை' என்றார். இவர், வில்ட்டன் (Wilton) என்கிற கேக்  நிறுவனத்தில், கேக் தயாரிக்கும் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");