[ad_1]
Ramanathapuram: விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரம் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகன் பார்த்திபன் (28) மற்றும் பொன்ராஜ் என்பவரின் மகன் மோகன்ராஜ் (23) ஆகிய இருவரும் நேற்று பகல் 1 மணி அளவில் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ராமேஸ்வரம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மீது அரசுப் பேருந்து ஒன்று மோதியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலியானார். மோகன்ராஜ் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
விபத்தில் பலியான இருவரின் உடலும் இன்று காலை பிரேத பரிசோதனைச் செய்யப்படும் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் நேற்று இரவில் இருந்தே மருத்துவமனை முன்பு கூடியிருந்தனர். இந்நிலையில் இன்று பகல் 1 மணி வரை பிரேத பரிசோதனைக்கு மருத்துவர்கள் வராததால் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தாமதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாகப் பிரேத பரிசோதனை நடத்தக் கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸாரும் மருத்துவர்களும் மறியலில் ஈடுபட்டவர்களைச் செய்ததுடன் பிரேத பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதன் பின் விபத்தில் பலியான இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலை 3 மணி அளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை செய்ய தாமதம்! - உறவினர்கள் கொந்தளிப்பு
TAGS :
COMMENTS