[ad_1]





Chennai: 

இரட்டை இலைச் சின்னம் உங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் உறுதிபட தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே முதலமைச்சர் பழனிசாமி தங்களது கருத்தைப் பதிவுசெய்தார் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


இதுதாெடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர் வளங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரி தலைமையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து மற்றும் நீர்வள ஆதாரங்கள்குறித்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், மத்திய அமைச்சர் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அனைத்து செய்தியாளர்களும் தங்கள் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது என்றும், இது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதா என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டனர். அந்த சூழ்நிலையில், கூட்டத்தில் இருந்தபடியால் ஆணை வெளியிடப்பட்டதா இல்லையா என்று தெரியாத நிலையில், செய்தியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் அடிப்படையில் முதலமைச்சர் "இரட்டை இலைச் சின்னம் எங்கள் அணிக்கு கிடைத்திருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது" என்ற கருத்தைப் பதிவுசெய்தார்கள்.


பின்னர், கூட்டம் முடிந்து வெளியே வந்த பிறகுதான், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதுவும் இதுவரை வரப்பெறவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது. எனவே, பத்திரிகையாளர்கள் உறுதிபட தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே முதலமைச்சர் தங்களது கருத்தைப் பதிவு செய்தார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");