[ad_1]
எங்கும் குப்பை, எதிலும் குப்பை! நம் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது மாசு. நமக்குத் தெரிந்தே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது இயற்கை. அதிலும், இன்று மனிதர்களால் மிக மோசமாக அசுத்தமாக்கப்பட்டு வரும் ஒன்று, காற்று. தலைநகர் டெல்லியில் அண்மையில் நிகழ்ந்த காற்று மாசுபாட்டை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். காற்றின் தரத்தை அளக்கும் 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' (AQI) கணக்குப்படி, காற்று மாசு 400 என்ற அளவையும் தாண்டியுள்ளது. இந்த அளவு 150-ஐத் தாண்டினாலே உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும். 400 என்பது, அபாயகரமான சூழல். உயிரினங்களின் அத்தியாவசியமான காற்றை நஞ்சாக்கிய பொறுப்பு நம்மையே சாரும். ஆறு ஓடும் நீர்வழிகளில் கட்டடங்கள் கட்டுவது, பிளாஸ்டிக் பயன்பாடு, மிக அதிகமாக வெளியாகும் வாகனப்புகை... போன்றவற்றால் நஞ்சாகிக்கொண்டிருக்கிறது காற்று. டெல்லியில் மட்டும்தான் இந்தநிலை என்று கூறி பிற மாநிலங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. தமிழ்நாட்டையும் மிக மோசமான காற்று மாசு பாதிக்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
சில தகவல்கள்... * உலக அளவில், பெரும்பாலான இறப்புகள், சுவாசப் பிரச்னை காரணமாகத்தான் நிகழ்கின்றன. அமெரிக்காவில், இதயம் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்து, அதிக அளவில் மனிதர்கள் இறப்பதற்கு சுவாசப் பிரச்னைதான் காரணமாக இருக்கிறது. ஆசிய அளவில் 65 சதவிகித இறப்பும், இந்திய அளவில் 25 சதவிகித இறப்பும் காற்று மாசுபாட்டால்தான் நிகழ்கின்றன. உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி, ஓர் ஆண்டுக்கு 4.6 மில்லியன் (46 லட்சம்) பேர் சுவாசப் பிரச்னை காரணமாக இறக்கிறார்கள். அவர்களில், இந்தியாவில் மட்டும் 5,27,700 மக்கள் இறக்கின்றனர். 80 சதவிகித நுரையீரல் பாதிப்புகளுக்கு கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் வெளியிடும் புகைதான் காரணம். * 2015-ம் ஆண்டு `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் நடத்திய ஆய்வு முடிவின்படி, நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வருடமும், வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம் அதிகரிக்கிறது. அக்டோபர் 2015-ன் கணக்குப்படி, 29.83 லட்ச வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில், 22.5 லட்சம் இருசக்கர வாகனங்கள், 5.26 லட்சம் கார்கள், 45,500 ஆட்டோ-ரிக்ஷாக்கள், 67,000 வேன்கள். * உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி உலகளவில் அதிகம் மாசு நிறைந்த நகரங்களில், 13 முதல் 20 வரை இந்தியாவில்தான் இருக்கின்றன. * டெல்லியில் இருக்கும் 50% குழந்தைகள் (44 லட்சம் குழந்தைகள்), நுரையீரல் சார்ந்த வாழ்நாள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 2017, ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் (Health Effects Institute) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1990 முதல் 2015-ம் ஆண்டு வரை காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் பிரச்னை பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 150 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நம்மைக் கலங்கவைக்கும் புள்ளிவிவரங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். இப்படி காற்று மாசுபாட்டால் நம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், அதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார் நுரையீயல் சிகிச்சை நிபுணர் ஜெயராமன்.... ``இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பிரச்னை, சுற்றுச்சூழல் சீர்கேடு. காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள். சில வளர்ந்த நாடுகளில் நான்கு சக்கர வாகனம் வாங்குவதே கடினம். ஆனால், இந்தியாவிலோ வீட்டுக்கொரு வாகனம் என்கிற அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கைத் தாறுமாறாகப் பெருகியிருக்கிறது. இன்னொரு பக்கம், உயர்தர எரிபொருள்கள் (குறைந்தளவு கார்பன்-மோனாக்ஸைடை வெளியிடும்) நமக்குக் கிடைப்பதில்லை. தரத்தில் குறைந்த எரிபொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது, காற்றில் நஞ்சு அதிகமாகக் கலக்கும்; சுற்றுச்சுழல் பாதிக்கப்படும்; அதன் காரணமாக நமக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பனிக்காலத்திலும், கோடைகாலத்திலும் இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். பனிக்காலத்தில், சரியான காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், நச்சுக்காற்று பல மணிநேரங்களுக்கு மேலெழ முடியாமல், நமக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். கோடைகாலத்தில், வாகனப் புகைகளோடு சேர்த்து, வறண்ட பகுதிகளும் நச்சுக்காற்றை உமிழும். இவை, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் தொடர்பான தொற்று பாதிப்புகள், கட்டி, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு (Lung Attack), இதய பாதிப்புகள், நுரையீரல் புற்றுநோய், சுவாச பாதிப்புகள், மூக்கில் இருக்கும் நுகர்வுத்திறன் குறைவது போன்றவற்றை ஏற்படுத்தும். இறப்பை ஏற்படுத்தும் நோய்களில், இதயநோய் மற்றும் புற்றுநோய்களுக்கு அடுத்து, சுவாசக் கோளாறுகள்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. `காற்று மாசுபடுவதால், உடல்நல பாதிப்புகள் மட்டுமல்ல... இயற்கைச் சீரழிவுகளும் ஏற்படலாம். அவற்றின் உச்சக்கட்டம் அமில மழை (Acid rain). இது ஏற்பட்டால், கடுமையான நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, மாசு கலந்த நீர்தான் நமக்குக் கிடைக்கும்’ என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். தீர்வுகள்... * தொழிற்சாலைகளிலிருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை ஆகியவை ஆபத்தானவை. அங்கு வேலை பார்ப்பவர்கள், முன்னெச்சரிக்கையோடு, பொருத்தமான பாதுகாப்பு சாதனங்களை அணிந்துதான் பணிபுரிய வேண்டும். எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், தொடர்ந்து பணி செய்தால், அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். * வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் நம் உடலுக்கு மிகப்பெரிய எதிரி. நம் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். அவசரமில்லாத, சாதாரண சூழல்களில், பொது வாகனங்களைப் பயன்படுத்தலாம். * வெளியில் செல்லும்போது, மாஸ்க் அணிந்துகொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் கைகுட்டையையாவது மாஸ்காகப் பயன்படுத்தலாம். ஹெல்மெட் அணிந்திருக்கும் சிலர், கடுமையான போக்குவரத்து நெரிசலிலும் மூக்கை மூடாமல் இருப்பார்கள். அவர்கள் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம். * குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். டெல்லியின் மாசு கலந்த காற்றுக்கான முக்கியக் காரணம், அளவுக்கு மீறி அங்கு எரிக்கப்பட்ட குப்பைகள். * அதிகம் நெரிசலான இடங்களில் வாழ்பவர்கள், அன்றாடம் மூச்சுப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, காலை (அ) இரவு வேளைகளில் அமைதியான சூழலில் அமர்ந்து மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளிவடுவது, மூக்கின் ஒரு துவாரத்தில் மூச்சையிழுத்து மற்றொன்றின் மூலம் வெளிவிடுவது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். காற்று மாசுபாட்டால் பலரையும் பாதிக்கும் பிரச்னை நுகர்வுத்திறன் பாதிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, நுகரவே முடியாமல் போகும் நிலைக்கு ஆளாக்கிவிடும். இது, ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து புகைமண்டலங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அவ்வப்போது மருத்துவர்களை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காற்று மாசுபாட்டைப் போக்க, நம் எல்லோருக்குமே இயற்கையின் மீது அக்கறை அதிகரிப்பதுதான் நிரந்தர தீர்வு தரும். என்றாலும், முன்னெச்சரிக்கையோடும் முறையான வாழ்க்கை முறைகளையும் கடைப்பிடிப்பது மாற்றத்துக்கு வழிவகுக்கும்!’’ என்கிறார் ஜெயராமன்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
காற்று மாசு உண்டாக்கும் சுவாசப் பிரச்னை... அறிகுறிகள், பாதிப்புகள், தீர்வுகள்!
TAGS :
COMMENTS