[ad_1]
கோவையில், சில நாள்களுக்கு முன்னர் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது; அரசியல் விமர்சகர்கள் பலரும் இதுகுறித்து தங்களது ஆட்சேபங்களை விமர்சனமாக முன்வைத்தனர். இதற்கு ஆளுநர் மாளிகை தரப்பில், அறிக்கை மூலம் பதில் வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
'உரிய நேரத்தில், தமிழக மக்களிடத்தில் சில முக்கியமான சர்ச்சைகள்குறித்த விளக்கத்தைக் கூறவேண்டியது கட்டாயமான ஒன்றாகும். சமீபத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்கள் தமிழக மக்கள் மற்றும் மீடியாவின் கவனத்தை ஈர்த்தது. கோயம்புத்தூரில் மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்த ஆளுநர், அவர்களிடமிருந்து நேரடியாக அரசின் நலன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்குறித்த விளக்கங்களையும், அதன் நடைமுறைகளையும் கேட்டறிந்தார். இந்த நடவடிக்கைகளை சிலர் வரவேற்றுள்ளனர். ஆனால், இன்னும் சிலரோ 'ஆளுநர் தனக்கு உள்ள அதிகாரங்களை மீறி விதிமுறைக்கு மாறாக செயல்பட்டுள்ளார்' என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில், ‘ஆளுநர் அரசியல் ஆதாயத்தோடும், கட்சிகளுக்கு ஆதரவாகவும்... குறிப்பாக மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்' என்ற விமர்சனத்தைப் பரவலாக முன்வைத்துள்ளனர். இந்த விமர்சனம் முற்றிலும் தவறானது. அதுமட்டுமன்றி 'ஆளுநர் சட்ட விதிகளை மீறி செயல்படுகிறார்' என்ற விமர்சனத்துக்கும் பதில் இருக்கிறது. ஆளுநர், மீடியாவிடமும் தனது நடவடிக்கைகுறித்து விளக்கியுள்ளார். எந்த விதத்திலும் சட்ட விதிகளையும், தனக்கான அதிகாரங்களையும் மீறி அவர் செயல்படவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறியதோ அல்லது பெரியதோ அதில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல், முறையான அரசியலமைப்பு சட்ட விதிகளின்படியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் மாநில அரசின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குத் தேவையான அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்.
ஆளுநர் நடவடிக்கைகள் சரி என்ற போதிலும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்ட வல்லுநர்களிடம் தனது நடவடிக்கைகுறித்த பரிந்துரையைக் கேட்டார். கோயம்புத்தூரில் நடந்த மாவட்ட அதிகாரிகள் சந்திப்பில், ஏதேனும் விதிமீறல்கள் இருந்துள்ளனவா எனக் கேட்டார். அதற்குப் பதில் அளித்த சட்ட வல்லுநர்களும் 'எந்த விதிமீறலும் இல்லை. அனைத்துமே சட்ட விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான்' என்று கூறியுள்ளனர். மேலும், இந்தச் சந்திப்பில், நலத்திட்டங்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் ஆளுநர் வழங்கியுள்ளார்.
இதற்கு முன்பும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்தபோது இதே மாதிரி மாவட்ட அதிகாரிகளுடனான சந்திப்பை நடத்தியுள்ளார். அதனை அனைவரும் பாராட்டியும் உள்ளனர். இந்தச் சந்திப்பில், அதிகாரிகளிடமிருந்து முதல் தர தகவல்கள் பெறப்பட்டு அதற்கேற்ப மக்கள் நலத்திட்டங்கள் சீரமைக்கப்படும். இவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகளைத்தான் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த, பன்வாரிலால் புரோஹித் முன்னெடுக்கிறார். இதற்குப் பாராட்டு தெரிவித்த தமிழக அமைச்சர்கள், தங்களது உதவிகளையும் வழங்குவதாகக் கூறியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தச் சந்திப்புகள் மாநில அரசின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அல்ல. அவர்களுக்கு உதவுவதற்கானதே. இதுபோன்ற செயல்கள் மக்களின் நலனில், ஆளுநர் நேரடி தொடர்பில் இருக்க உதவி செய்பவையாகவே இருக்கும்.
ஏற்கெனவே கூறப்பட்டதுபோல ஆளுநர் சட்ட விதிகளை மீறி எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. அவர் அறத்தின் வழி நின்றே செயல்படுகிறார். இவரது செயல்பாடுகள் தமிழகத்தில் பொற்காலத்தை உருவாக்கும்' என்று ராஜ் பவன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'அரசு விழாக்களிலும் பட்டமளிப்பு விழாக்களிலும் மட்டுமே கலந்துகொள்ளும் பெயரளவு பதவி உள்ளவராகவே இந்த ஆளுநரும் இருப்பார்' என்ற பொதுவான எதிர்பார்ப்பை பன்வாரிலால் புரோஹித் உடைத்துள்ளார். இதையேதான் அவரது விளக்கமும் சுட்டிக்காட்டுகிறது. அடுத்து கன்னியாகுமரியில் ஆய்வுசெய்ய உள்ளார் ஆளுநர். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் அவரைப் பார்க்கலாம். கோவையும், கன்னியாகுமரியும் பி.ஜே.பி-க்கு செல்வாக்கான இடங்கள். எனவே, அங்கிருந்து ஆளுநரின் செயல்கள் தொடங்கியுள்ளன என்பதே கோட்டையின் தகவல்கள்.
'அடுத்து என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?' என்பதே இப்போதைய அரசியலில் எதிர்பார்ப்பாக உள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அரசு விதிகளை மீறினாரா ஆளுநர்... ராஜ் பவன் தரும் பதில் என்ன?
TAGS :
COMMENTS