[ad_1]
தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளது என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், `இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி எதிர்கால வாக்காளர்களான 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட, குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்திட தேசிய வினாடி வினா-2017 நிகழ்ச்சிகள் ஐந்து சுற்றுக்களாக நடத்தப்பட உள்ளன. அக்கூட்டத்தில் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் முதல் சுற்று 01.11.2017 முதல் 10.11.2017 வரையிலும், இரண்டாம் சுற்று 11.10.2017 முதல் 17.11.2017 வரையிலும், மாநில அளவில் மூன்றாம் சுற்று 201.11.2017 முதல் 25.11.2017 வரையிலும் நடைபெற உள்ளது. எனவே,கரூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் அதன் பின்னர் தேசிய அளவில் நடைபெறவுள்ள அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிபெற தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தேர்தல் பற்றி விழிப்புஉணர்வு வர மாணவர்களுக்கு வினாடி வினா: கரூர் கலெக்டர் அறிவிப்பு!
TAGS :
COMMENTS