[ad_1]

கன்னியாகுமரியில் தினமும் அதிகமான சுற்றுலாப் பயணிகள வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இருந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் தான் கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். இதனை கன்னியாகுமரியின் சீசன் காலம் என்று சொல்வார். சபரிமலை மண்டல பூஜைக்காக வரும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கும் வருவார்கள். டிசம்பர் மாதத்தில் பள்ளிக்கூடங்களில் அரையாண்டு தேர்வு முடிந்ததும், விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவு இருக்கும்.



அதுபோல ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை மகர விளக்கு தரிசனத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த மூன்று மாதங்களும் அதிகமான கூட்டம் இருக்கும். இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் இன்று தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஐயப்பபக்தர்களுக்கும் கன்னியாகுமாரி பேரூராட்சி சார்பில் பல்வேறு அடிப்படையான வசதிகள் செய்யப்பட உள்ளன. கழிப்பறை, குடிநீர் வசதி, சுகாதார வசதி தீவிரமாக செய்யப்பட உள்ளது. துப்புரவு பணிகளுக்காக கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுழர்ச்சி முறையில் துப்புரவுப் பணியில் ஈடுபடுவார்கள்.

சன் செட் பாயிண்ட் மற்றும் கடற்கரை பகுதியில் கழிப்பறை வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகுதியில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதுபோல 9 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட உள்ளது. கடற்கரைப்பகுதி, சன்னதி தெரு, காந்தி மண்டபம், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலை பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி சீசன் காலத்தில் ஒட்டி வந்தது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக 623 கடைகள் ஏலம் விடப்பட்டன. அதில் 594 சீசன் கடைகள் மட்டுமே ஏலம் போனது. இதன்மூலம் பேரூராட்சிக்கு 1கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 277 ருபாய் வருமானம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் சீசன் காலத்தை முன்னிட்டு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக 250க்கும் மேற்பட்ட போலீஸாரும் ஊர்காவல் படையினரும் சுழர்ச்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக கன்னியாகுமரி நகரம் காத்திருக்கிறது.