[ad_1]

சீனாவின் தயாரிப்பான அதிக குதிரை திறன் கொண்ட படகு என்ஜின்களை ராமேஸ்வரம் மீனவர்களிடம் விற்பனை செய்யும் முயற்சிகளை சீன வியாபாரிகள் துவக்கியுள்ளனர்.





நீண்ட கடற்பரப்பை கொண்ட தமிழகத்தில் ஆயிரகணக்கான படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான படகுகளில் அரசின் விதிகளுக்கு உட்பட்ட குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சமீபகாலமாக இவற்றுக்கு மாற்றாக அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகி வருகின்றன. இத்தகைய அதிவேகம் கொண்ட இன்ஜின்களால் ஏற்கனவே அழிவினைச் சந்தித்து கொண்டிருக்கும்  மீன் இனங்கள் மேலும் அழிவுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.


சமீபத்தில் சென்னையில் அதிக குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின்களை பொருத்திய மீனவர்களுக்கும், பாரம்பரிய மீனவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் சீன இன்ஜின்களை விற்பனை செய்யும் முயற்சிகளை சீன வியாபாரிகள் துவங்கியுள்ளனர். இன்று ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு மடிக்கணினியுடன் வந்த இரு சீன வாலிபர்கள் கடற்கரையில் இருந்த மீனவர்களிடம் சீன தயாரிப்பு இன்ஜின்கள் குறித்து விவரித்து ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாக் நீரிணை பகுதியில் அதிகபட்சமாக 180 குதிரை திறன் அளவிலான என்ஜின்களையே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சீன தயாரிப்பு என்ஜின் குறைந்த பட்ச திறனே 200 குதிரை திறன். இத்தகைய என்ஜின்களை எல்லா வகையான மீன்பிடிப்புக்கும் பயன்படுத்த முடியும் என சொல்லி அந்த இளைஞர்கள் மீனவர்களை கவர்ந்துள்ளனர்.
 ஏற்கனவே முறையற்ற மீன்பிடி முறை, பருவ நிலை மாற்றம் போன்றவற்றால் மீன் வளம் குறைந்து வருகிறது. இந்நிலையில் சீன என்ஜின்கள் இப்பகுதியில் அனுமதிக்கப்பட்டால் ஒட்டு மொத்த கடல்வளமும் அழியும் நிலை ஏற்படும். எனவே இத்தகைய கூடுதல் திறன் கொண்ட என்ஜின்களை அனுமதிக்கக் கூடாது என பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகின்றனர்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");