[ad_1]





விமானம் தாமதம் காரணமாக, மத்திய அமைச்சருடன் பெண் பயணி ஒருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 




இம்பால் நகரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், செவ்வாய்க்கிழமை கொல்கத்தா சென்று, அங்கிருந்து பாட்னா செல்வதற்கு இண்டிகோ விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அப்போது, இம்பால் நகரில் நடந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகைதருவதாக இருந்தது. குடியரசுத் தலைவர் சென்ற விமானம் தரையிறங்கவேண்டியது இருந்ததால், அந்தச் சமயத்தில் வேறு விமானங்கள் புறப்பட அனுமதிக்கப்படவில்லை.

இதனால், பெண் பயணி செல்லவேண்டிய விமானம் புறப்படத் தாமதமானது. குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ள விழாவில் கலந்துகொள்ள மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அல்போன்ஸும் இம்பால் விமான நிலையத்துக்கு வந்து இறங்கியிருந்தார். அமைச்சரைப் பார்த்ததும் அந்தப் பெண் பயணி, ஆவேசமாக அவரிடம் சண்டையிட ஆரம்பித்தார்.  

'' எனது உறவினர் இறந்துபோனார். அவரின் இறுதிச் சடங்குக்கு நான் போக வேண்டும். எனக்காக சடலத்துடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.  நான் சீக்கிரம் அங்கு போக வேண்டும்'' என்று அமைச்சரிடம் சண்டையிட்டார்.  'விமானம் எப்போது கிளம்பும் என்று எனக்கு எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுங்கள்' என்று அமைச்சரை அந்தப் பெண் சட்டையைப் பிடித்துக் கேட்காதக் குறை. பெண் பயணியின் ஆவேசத்தால் பதறிப்போன அமைச்சர், 'எனக்கு அவ்வாறு செய்துகொடுக்கவெல்லாம் அதிகாரம் கிடையாது ' என்று சமாதானப்படுத்தினார். சமாதானமடையாத அவர், விமான நிலையத்தில் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தார். 


I was waiting and crying so I approached the Minister (KJ Alphons), thinking a Minister can do everything: Dr. Nirala, woman who shouted at KJ Alphons at Imphal Airport pic.twitter.com/fxI6IDyNKW
— ANI (@ANI) November 22, 2017


இந்தச் சம்பவம்குறித்து அமைச்சர் அல்போன்ஸ் கூறுகையில்,'' பாதுகாப்பு விதிகளின்படி குடியரசுத் தலைவர் விமானம் தரையிறங்கும்போது, வேறு விமானங்கள் தரையிறங்கவோ புறப்படவோ அனுமதி கிடையாது. மக்கள் பிரநிதியாக இந்த விஷயத்தில் என்னைத் தலையிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், இதில் யாருமே தலையிட முடியாது'' என்றார். 


அமைச்சருடன் பெண் பயணி சண்டையிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");