[ad_1]

Madurai: 'யாராவது இலவசமாக மொபைல் போன்கள் வழங்குகிறார்கள் என்றவுடன் ஆசைப்பட்டு வாங்கிவிட வேண்டாம். அது திருட்டு மொபைல் போனாக இருக்கலாம். எச்சரிக்கையாக இருக்கவும்' என்று மதுரை போலீஸ் கமிஷனர் அலர்ட் செய்துள்ளார்.

 




 

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்குமார் அகர்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'மதுரை நகரில் உள்ள  21 காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை திருட்டு, விபத்து, காணாமல்போனது என்று கைப்பற்றப்பட்டவையாகும் மொத்தம் 1,525 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இதில் ஒரு மாதத்தில் மட்டும் 125 வாகனங்கள் திருடப்பட்டு உடனே கண்டுபிடிக்கப்பட்டவை. இன்று 86 வாகன உரிமையாளர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு வண்டியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. 600 வாகனங்களைப் போக்குவரத்து இணையதளம் மூலம் ஆய்வு செய்தலில் 161 வாகன உரிமையாளர்களின் முகவரி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்புகொண்டு நேரில் வரச் சொல்லியுள்ளோம். மீதமுள்ள வாகனங்களுக்கான பழைய ஆவணங்கள் மூலம் முகவரி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். சரியான ஆவணங்களைச் சரி பார்த்து உறுதிப்படுத்தப்பட்ட பின் வாகனங்கள் வழங்கப்படும் .



 


வாகனங்களுக்கு உரிமை கோராதபட்சத்தில் ஆர்.டி.ஓ வசம் ஒப்படைக்கப்படும். இதுவரை செல்போன் திருடர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். இந்தச் செல்போன்களைத் திருடி குறைந்த விலைக்கும், இலவசமாக வழங்குகின்றனர் திருடர்கள். இதனால் அப்பாவிகள் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே, யாராவது இலவசமாக மொபைல் போன்கள் வழங்குகிறார்கள் என்றவுடன் ஆசைப்பட்டு வாங்கிவிட  வேண்டாம். அது திருட்டு மொபைல் போனாக இருக்கலாம். எச்சரிக்கையாக இருக்கவும். மதுரையில் இருக்கக்கூடிய பஜார்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இரண்டாவது விற்பனைக்கு வரும் போது செல்போன்களின் முழு விவரம் மற்றும் கையில் உள்ள செல்போன்களின் எண்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");