[ad_1]
கார்த்திகை தீபம் என்றதும், வீடுகள்தோறும் ஒளிரும் அகல் விளக்கு தீபங்கள் கண் முன்பு விரிந்து மனதை குளுமையாக்கும். நம் பாரம்பர்ய பண்டிகையை இன்னும் சிறப்பாக்கும். ஒவ்வொரு வீட்டை ஒளி மயமானதாக மாற்றி புதிய அழகை அள்ளித் தரும். தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி களைக் கட்டத் தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம், கருப்பூர் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் சுலோச்சனா மற்றும் அவரின் மருமகள் புவனேஸ்வரி குடும்பத்தைச் சந்தித்தோம். மகிழ்வுடன் வரவேற்றுப் பேசினார்கள்.
''தாத்தா, பாட்டி காலத்திலிருந்தே இந்தத் தொழிலை செஞ்சுட்டிருக்கோம். நாங்க மட்டுமில்லே; இந்தத் தெருவில் இருக்கும் பல குடும்பங்களுக்கு இதுதான் பரம்பரைத் தொழிலாக இருந்துச்சு. காலப்போக்கில் ஆண்கள் வெளி வேலைக்குப் போயிட்டாங்க. பொம்பளைங்கதான் இந்தத் தொழிலைப் பார்த்துக்குறோம். காலையில் ஒன்பது மணிக்குள்ளே வீட்டு வேலைகளை முடிச்சுடுவோம். பசங்க ஸ்கூலுக்கும் வீட்டு ஆம்பளைங்க வேலைக்கும் கிளம்பினதும் அகல் விளக்கு செய்ய உட்கார்ந்துடுவோம். ஒரு நாளைக்கு ஆயிரம் விளக்குகள் வரை செய்வோம். அப்படி ஆயிரம் விளக்குகள் செய்தால், 500 ரூபாய் லாபம் கிடைக்கும். ஐம்பது பைசாவிலிருந்து மூன்று ரூபாய் வரை அகல் விளக்கின் அளவுக்கு ஏற்ப விற்போம். அதை வாங்கறவங்க, மேற்கொண்டு லாபம்வெச்சு விற்பாங்க. எல்லா நேரத்திலும் விற்பனை ஒரே மாதிரி இருக்காது. இந்த மாதிரி கார்த்திகை திருவிழா சமயத்தில் 20,000 ருபாய் முதலீடு போட்டு 50,000 ரூபாய் வரையெடுப்போம்'' என்றார் புவனேஸ்வரி.
“நம்ம ஊர் பக்கம் விவசாய நிலம் என்பதால், வயக்காரர்கங்ககிட்ட சொல்லிடுவோம். ஒரு லோடு 700 ரூபாய்க்கு கொடுத்துடுவாங்க. அதுவே தஞ்சாவூர் பக்கம், குட்டி யானையில் ஒரு லோடு களிமண் எடுக்க 3,000 ரூபாய் வரை சொல்வாங்க. நாங்க கிராமத்தில் இருக்கிறதால் பிரச்னை இல்லை. களிமண்ணை காயவெச்சு, தண்ணியோடு கலந்து விளக்கு செய்யும் பக்குவத்துக்கு கொண்டுவருவோம். இந்தத் தொழிலில் பிரச்னை ஒண்ணு இருக்கு. ஐப்பசி, கார்த்திகை வந்தாலே மழை ஆரம்பிச்சுடும். அப்போ, களிமண்ணை பக்குவபடுத்தறது பெரும்பாடு. காயவைக்க இடம் இருக்காது. வீட்டுக்குள்ளே காயவெச்சாலும் ஒழுங்காக உலையில் சூடாக்கணும். இல்லைன்னா முதலுக்கே மோசமாகிடும். கொஞ்சம் உருமாறினாலும் வாங்க மாட்டாங்க'' என்றார் சுலோச்சனா.
''கார்த்திகை தீபம் இல்லாத மற்ற நாள்களில் ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற கோவில்களுக்கு மொத்தமாக கொடுத்துடுவோம். என்னதான் பீங்கான் விளக்குகள், அச்சு விளக்குகள் என்று விதவிதமாக வந்தாலும், நம்ம மண் விளக்குகளுக்கான தனித்தன்மை மாறாது. மண் விளக்கில் தீபமேற்றி கொண்டாடறதுதான் பாரம்பரியம். பெரிய நகரத்துலதான் எண்ணெய் வாங்கவும், அதை ஊற்றி ஏற்றவும் அலுப்பு பட்டுக்கிட்டு மெழுகு விளக்குகளை ஏத்தறாங்க. நல்லவேளை அந்த நாகரிகம் ஊர்ப்பக்கம் இன்னும் வரலை. அதனால், எங்க பொழைப்பு ஓடிட்டிருக்கு'' என்று சிரிக்கிறார்கள் மாமியாரும் மருமகளும்.
அந்தச் சிரிப்பில், கைத்தொழிலின் அழகும் நம் பாரம்பரியத்தின் பெருமையும் ஒன்றாக ஒளிர்ந்தது. பெண்களின் உழைப்பில் உருவாகும் விளக்குகள் இன்னும் கூடுதல் அழகோடு மின்னின. பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் இவர்களின் பயணம் நீண்ட காலத்துக்குத் தொடரட்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கார்த்திகை தீபமேற்ற அகல் விளக்குகள் தயாரிக்கும் தஞ்சைப் பெண்கள்!
TAGS :
COMMENTS